சபரிமலை பகுதிக்கு செல்லும் பக்தர்களுக்கு கஞ்சியும், அதற்கு கரியையும் மட்டும் வழங்கினால் போதாதா? , இந்த யாத்திரையை, புனித யாத்திரையாகதான் பக்த்தர்கள் கருதவேண்டும் , சுற்றுலாவாக கருத கூடாது. இதுதொடர்பாக, திருவிதாங்கூர் தேவஸ்வம்_போர்டும், மாநில அரசும் விளக்கம் தர வேண்டும்’ என்று கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரளாவில் அமைந்துள்ள சபரிமலையில் பிரசித்திபெற்ற அய்யப்பன் கோயில் உள்ளது. இக்கோவிலுக்கு நாட்டின் பலபகுதிகளில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் கோடி கணக்கான பக்தர்கள் வருடம் தோரும் வந்து சுவாமிதரிசனம் செய்துவருகின்றனர் .
இப்படி வரும் கோடிகணக்கான பக்தர்ளுக்கும் ,தோசை, இட்லி, பரோட்டா, பூரி, கஞ்சி உள்ளிட்ட , பல உணவு வகைகள், தனியார் ஓட்டல்களின் மூலம் விற்கப்படுகின்றன. மீதமாகும் உணவுபொருட்களை, வனத்தின் பலபகுதிகளில் கொட்டி விடுகின்றனர். பிளாஸ்டிக் பொருள்களை பயன் படுத்தி தூக்கி எறிவதால், கழிவுகள் மலை போன்று குவிந்து வருகின்றன.
இந்நிலையில் இப்பிரச்சனை கேரள ஐகோர்ட் முன் விசாரணைக்கு வந்தது; அப்போது நீதிபதிகள் தெரிவித்ததாவது : சபரிமலை , பம்பை பகுதிகளில், நிறைய உணவுவகைகள் பக்தர்களுக்கு விற்க படுகின்றன. வழி நெடுகிலும் பக்தர்களுக்கு உணவாக கஞ்சியும், அதற்க்காக கறியும்_மட்டும் வழங்கினால் போதாதா? பக்தர்கள் சபரிமலை யாத்திரையை புனித யாத்திரையாக கருத வேண்டுமே தவிர, சுற்றுலாவாக கருத கூடாது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ... |
சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ... |
சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.