பதில் சொல்லும் பொறுப்பு பலியாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்

 142 நிலக்கரிச் சுரங்கங்களைத் தன்னிச்சையாகவும் சொந்த விருபப்பத்தின் அடிப்படையிலும் ஒதுக்கீடு செய்த முடிவு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசைக் கழுத்தைச் சுற்றி நெருக்கும் வளையமாக மாறியுள்ளது. ஆணவமும் ஆதிக்க மனப்பான்மையும்

கொண்ட இந்த அரசு ஒதுக்கீடுகள் செய்யப்பட்ட பின், ஒவ்வொரு சுரங்க ஒதுக்கீடுகளுக்கும் கணக்குக் காட்டியாக வேண்டும் என்பதைக்கூட உணரவில்லை.

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் போட்டி ஏல முறையைப் பின்பற்றுவது என்று முடிவு செய்யப்பட்ட பின், இதை அமல்படுத்த அரசுக்கு எட்டு வருடங்களாகின என்ற அடிப்படையில் கட்டுப்பாடு மற்றும் கணக்குத் தணிக்கை அதிகாரியின் (சி.ஏ.ஜி.) அறிக்கை அமைந்துள்ளது. இந்த எட்டு ஆண்டுக் காலத்தில் 142 சுரங்கத் தொகுதிகள் தனியார் நிறுவன்ங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இவர்களில் பெரும்பாலானோர் வர்த்தகர்கள்தான், உண்மையான பயனாளிகள் அல்லர். ஆய்வுக் குழுவினர் நிலக்கரிச் சுரங்கத்தின் உண்மையான மதிப்பை உணரவில்லை என்பதால், பொதுக் கருவூலத்துக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்பட்டுவிட்டது.

பிரதமரின் அலுவலகத்திலிருந்து எழுப்பப்பட்ட ஒரு ஆட்சேபணை, சட்ட அமைச்சகம் அளித்த ஒரு தவறான கருத்து, திருத்தப்பட்ட சட்டத்தை அமல்படுத்துவதில் காரணமே இல்லாமல் ஏற்பட்ட மிக அதிகமான தாமதம் ஆகியவைதான் இந்த எட்டு வருட தாமதத்திற்குக் காரணங்கள். இதில் எந்தக் காரணமும் நம்பத்தக்கதாகத் தோன்றவில்லை.

இந்த எட்டு வருடங்களில் கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் பிரதமர்தான் நிலக்கரித்துறை  அமைச்சராக இருந்தார். இவருக்கு உதவியாக ஒரு இணை அமைச்சர் இருந்தார். தில்லியின் அதிகார வட்டங்களுக்கு முழுத் தகவல்களையும் அப்போதைய நிர்வாக அதிகாரிகள், வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் ஆகியோருடன் தோற்றுப்போன விண்ணப்பதாரர்களும் அளித்துவந்தனர். இந்தத் தகவல்கள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் செயல்பாடுகள் மீதான மோசமான கருத்தையே பிரதிபலிக்கின்றன. இந்தத் தகவல்கள் வெளிப்படுத்திய உண்மைகள்:

• திறமையின்மை, வலுவான தலைமை இல்லாமை, நன்மை பயக்கும் நோக்கங்களுக்காக அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் தாமதம்.

• வெற்றிகரமான தொழில்முனைவோர் தன்னிச்சையாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு ஏதுவாகப் போட்டி ஏலமுறையைப் பயன்படுத்தும் முறையை அமல்படுத்துவதற்கு எட்டு ஆண்டுகள் வீணடிக்கப்பட்டன.

• ஆய்வுக் குழு செயல்முறை கேலிக்கூத்தாகவே அமைந்திருந்தது. அரசாங்கத்தை நடத்தும் ஒரு சிலரின் தனிப்பட்ட முறையிலான உத்தரவு இந்த முடிவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

• ஒரு சில இணை அமைச்சர்கள் இதில் தங்களுடைய பங்களிப்பு இருப்பதாகக் கூறவே இல்லை. இந்த ஒதுக்கீடுகளில் அவர்களுடைய பங்கு சந்தேகத்துக்கு இடமளிப்பதாகவே தோன்றுகிறது.

• வெற்றிகரமான விண்ணப்பதாரர்கள் அமைச்சகத்தின் மூலம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இணை-ஒதுக்கீட்டாளர்களோடு இணைந்துகொள்ளுமாறு கூறப்பட்டனர். இவர்கள் அனைவருமே அரசியல் ரீதியாக ஒதுக்கீடு பெற்றவர்களாகவே இருந்தனர்.

• அதிகாரத்தில் இருக்கும் கட்சிக்கு நிதி வழங்குதல் என்ற மறைமுகமான நிபந்தனையின் பேரில் மதிப்பு மிக்க பொது ஆதார வளம் தன்னிச்சையாக ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்துள்ளது.

• சுரங்கத் துறை அமைச்சகத்தின் கோப்புகளைக் கையாண்டுவந்த பிரதமரின் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளுக்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று தெரியாமல் இல்லை.

• ஒதுக்கீடு வழங்கப்பட்டவர்களில் பலர் பயனாளிகள் அல்ல. வர்த்தகர்கள். • மாநில அரசுகளின் பரிந்துரைகள் இல்லாமலேயே பல ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

 நிலக்கரி சுரங்கத்தின் இந்த ஒட்டுமொத்த ஒதுக்கீடு நடைமுறையுமே முறையற்றதாக உள்ளது. இந்தியா தனது இயற்கை ஆதார வளங்களை எவ்வாறு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்கிற மிகப் பெரிய கேள்வியை இது எழுப்புகிறது. கொள்கை முடக்கத்தால் பாதிக்கப்பட்ட கட்டுப்பாடில்லாத இந்த அரசு இந்த மிகப் பெரிய கேள்விக்கான பதிலைப் பெற உச்ச நீதி மன்றத்தை அணுகியுள்ளது. இயற்கை ஆதார வளங்களின் ஒதுக்கீடு குறித்த பிரச்சினை கொள்கை அதிகார வரம்பிற்குட்பட்டது. கொள்கை உருவாக்கம் என்பது நிர்வாகச் செயல்பாடு; நீதிமன்றச் செயல்பாடு அல்ல. ஒரு கொள்கை தன்னிச்சையானதாக அல்லது அரசியல் அமைப்புக்கு விரோதமானதாக இருந்தால் ஒரு நீதிமன்றம் அதைத் தள்ளுபடி செய்யலாம். ஆனால் நீதிமன்றத்தால் கொள்கைகளை உருவாக்க முடியாது. எந்த இயற்கை ஆதார வளங்கள் ஏலத்தில் விடப்பட வேண்டும், எவற்றை வேறு சில மாற்று வழிமுறைகளில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்கிற பிரச்சினைகள் அரசாங்கத்தால் முடிவு செய்யப்பட வேண்டியவை. நீதிமன்றங்கள் அரசாங்கத்தின் முடிவுகளைச் சட்ட ரீதியாக ஆராய்வதற்கான அதிகாரம் பெற்ற நிறுவனங்கள். அரசால் உருவாக்கப்பட்ட ஒரு கொள்கை ஊழலுக்கான கதவுகளைத் திறந்துவிட்டால், அந்தக் கொள்கையை நீதிமன்றத்தால் நீக்க முடியும். இப்படிப்பட்ட தன்னிச்சையான கொள்கைகளை உருவாக்கும்படி அறிவுரை சொல்லும் நிலை நீதிமன்றங்களுக்கு ஏற்பட்டால் என்ன நடக்கும்?

இந்திய அரசியல் கடுமையான நெருக்கடியை சந்தித்துவருகிறது. அரசியல் அதிகாரம் என்பது மகத்தானது. அதோடு ஒப்பிடும்போது ஆட்சி நிர்வாகத்தில் இருக்கும் சிலர் மிகவும் சிறியவர்கள். அரசியல் கட்சிகள் பெற்றிருக்கும் அதிகார வரம்பிற்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தனிப்பட்ட தேர்வின் அடிப்படையில் முடிவெடுப்பது குறைக்கப்பட்டு நீக்கப்பட வேண்டும். இது அரசியல் மற்றும் ஆளுகையில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தச் செயல்பாடுகளின் ஒரு பகுதி. அரசாங்கம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் காரண காரியங்களோடும் நியாயத்தை அடிப்படையாகக் கொண்டதாகவும் இருக்க வேண்டும்.

கனிம வளம் என்பது மதிப்பு மிக்க இயற்கை ஆதார வளம். இந்தியப் பொருளாதாரத்தை விரிவுபடுத்தி, வளர்ச்சியடையச் செய்வதில் அது முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. மத்திய மற்றும் மாநிலங்களின் ஒதுக்கீடு செய்யும் நடைமுறைகள், முடிவெடுத்தல்கள் ஆகியவை ஆள்வோரின் தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையிலான தேர்வாக இருப்பது மிக பிரம்மாண்டமான ஊலுக்கு வழிவகுத்துள்ளது. சாத்தியமான கனிம ஆதார வளங்களை ஒதுக்கீடு சம்பந்தமாக அரசாங்கம் கொள்கையை நெறிப்படுத்திக்கொண்டு, வெளிப்படையான மற்றும் பகிரங்கமான ஏல முறை மூலமாக மட்டுமே ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்கிற கட்டாயம் ஏற்பட்டுள்ளதை சமீபத்திய அனுபவங்கள் நமக்கு வலியுறுத்திக் கூறுகின்றன.

பிரதமரே அப்போதைய நிலக்கரித் துறை அமைச்சராக இருந்ததால், இந்த முடிவுகள் நியாயமாகத்தான் இருக்கும் என்று நாம் கருத வேண்டும் என்று கூறப்படுகிறது. இந்திய ஜனநாயத்தில் பிரதம மந்திரியின் அலுவலகம் புனிதமானது. எனவே, அ. ராசா போன்ற மந்திரிகளை மதிப்பிடுவதைக் காட்டிலும் கறாரான அளவுகோல்களின் அடிப்படையிலேயே பிரதமரின் செயல்பாடுகளை மதிப்பிட வேண்டும். நிலக்கரித் துறை அமைச்சராக பிரதமர் மேற்கொண்ட ஒதுக்கீடு முறை விதிமுறைகளின்படி அல்லாமல் தன்னிச்சையாக இருந்தது என்றால், அது நமது தேசத்தின் மனசாட்சியை உலுக்கும் செயலாகும். நடந்த முறைகேட்டிற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு பொறுப்புணர்வுடன் நடந்துகொள்வது பிரதமர் கைகளில்தான் உள்ளது.

இந்தப் பிரச்சினை குறித்த விவாதங்கள் நாடாளுமன்றத்தில் மட்டுமே நடக்க வேண்டும் என்ற பரிந்துரைகள் இந்திய வரலாற்றின் மிகப் பெரிய ஊழல்களில் ஒன்றான இதை மூடி மறைப்பதற்கான வழிதான். எதிர்கட்சிகளான நாங்கள், இந்தப் பிரச்சினை குறித்து ஒரு நாள் விவாதமாக நாடாளுமன்றத்தில் பேசிவிட்டுப் போவதற்குத் தயாராக இல்லை. விவாதம் என்பது நாடாளுமன்றத்திற்கு அத்தியாவசியமான ஒன்றுதான் ஆனால், பதில் சொல்லும் பொறுப்பும் அத்தகையதுதான்.

பொறுப்பேற்பதைத் தவிர்ப்பதற்காக விவாதம் பயன்படுத்தப்பட்டால், அதற்கு மாற்றுத் திட்டம் ஒன்று நிச்சயமாக தேவை. நாடாளுமன்றச் செயல்பாடுகளை முடக்குவது பொதுவாகத் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றுதான். ஆனால், அரிதிலும் அரிதான விஷயங்களில் செயல்பாடுகள் முடக்கமும் பலனளிக்கக்கூடியது. 2010ஆம் ஆண்டில் 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் பிரச்சினையால் பாராளுமன்றத்தின் மதிப்பு மிக்க ஒரு அமர்வே வீணடிக்கப்பட்டது. ஆனால் அ. ராசாவின் ராஜிநாமா, குற்றவியல் வழக்குகளுக்கான குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்படுதல், நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைத்தல், 3ஜி அலைக்கற்றை உரிமங்களையும் உபரியாக இருக்கும் 2ஜி அலைக்கற்றை உரிமங்களை ஏலம் விடுதல் என்னும் முடிவு (இதனால் அரசுக்கு ஏராளமான வருமானம்) ஆகியவை நடைபெற இந்த முடக்கம் வழிவகுத்தது.

அரசாங்கம் மத்திய கணக்குத் தணிக்கை அறிக்கையைப் பரிசீலனைக்காகப் பொதுக் கணக்குக் குழுவிற்கு அனுப்புவது முறைகேட்டை மூடி மறைப்பதற்காகப் பயன்படுத்துகிறது என்பது 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் கிடைத்த அனுபவம் வெளிப்படுத்துகிறது. 2008ஆம் ஆண்டில் 1658 கோடிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஏலத்திற்கான அடிப்படை விலையாக 14,000 கோடியை அரசே தற்போது நிர்ணயம் செய்துள்ளது. பொதுக் கணக்குக் குழுவில் முட்டுக்கட்டை போடும் உறுப்பினர்களால் இதே முடிவுக்கு இக்குழு வர  இயலாத நிலை இருக்கிறது. இந்த உறுப்பினர்கள் ஆளும் கூட்டணிக்கு உதவுகிறார்கள். நாடாளுமன்ற அமைப்புகள் சீரழிக்கப்பட்டு, பதில் சொல்லும் பொறுப்பை அவை இழக்கும்போது பதில் சொல்லும் பொறுப்பு பலியாகாமல் பார்த்துக்கொள்வதற்கான புது உத்திகளை அரசியல் அமைப்பு கண்டுபிடிக்க வேண்டும். விவாதம், பதில் சொல்லும் பொறுப்பு ஆகிய இரண்டும் ஒன்றிணைந்து இருத்தல் வேண்டும

நன்றி ஸ்ரீ அருண் ஜேட்லி

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...