இந்திய பொருளாதாரம் கலாசாரத்தின் அடிப்படையிலானது; எனவே, இந்திய பாரம் பரியத்தை காப்பாற்ற வேண்டும், மேலைநாடுகளில் சொல்லப்படும் சிவில்சொசைட்டி என்பது கேளிக்கை நிலையம் (கிளப்) போன்றது என சிறந்த பொருளாதார நிபுணரும், பத்திரிகையாளருமான எஸ், குருமூர்த்தி கருத்து தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க,.வின் “விவேகானந்தா ஆய்வு மையத்தின் (விவேகானந்தா ஸ்டடி சர்க்கிள்) சார்பில் நடந்த “உலக மயமும், இந்திய சமூகமும்’ எனும் தலைப்பில் அவர் பேசியதாவது: இந்தியா பற்றி நமது அறிவில் திணிக்க பட்டுள்ள கருத்துகளெல்லாம் இந்தியாவுக்கு வருகைதராத, இந்தியாவை பற்றி குறைவாக அறிந்திருந்த அறிஞர்களான காரல்மார்க்ஸ், மாக்ஸ் வெப்பர், ஜான் கல்பிரைத் போன்ற அறிஞர்களால் உருவாக்கபபட்டவை.
மேலைநாடுகளில் சொல்லப்படும் சிவில்சொசைட்டி என்பது கேளிக்கை நிலையம் (கிளப்) போன்றது. ஆனால், நமது சமூகம் வேறு . இந்த சமூக முறை தான் ஒருகாலத்தில் கழிவுகள் நிறைந்த இடமான சூரத் நகரத்தை வைரம்வெட்டும் தொழில் நகரமாக மாற்றியது . உலகம்மெங்கும் உள்ள பத்து வகையான வைரங்களில் 9 வகையான வைரங்கள், செüராஷ்ராவில் வெட்டப்படுகின்றன.
சிவில் சமுகத்தில் உறவுகள் என்பது ஒரு ஒப்பந்தம் ஆகும். அந்த சமுகம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தான் நமது அரசியல்சட்டமும் உருவாக்கப்பட்டுள்ளது. எங்கெல்லாம் குடும்ப உறவுகளும், சமூக உறவுகளும் பாரம்பரியமாக காக்கப் படுகின்றனவோ அங்கெல்லாம் அரசுகள் செய்ய வேண்டியதை சமூகங்களே செய்கின்றன. நம் நாட்டில் சேமிக்கும் பழக்கம் என்பது பண்பாட்டுடன் நெருங்கிய தொடர் கொண்டது . ஆனால், மேற்கத்திய நாடுகளில் கணவன் மனைவி, குழந்தைகள் பராமரிப்பு என்று அனைத்தும் ஒப்பந்தத்தின் அடிப்படையிலானவை. அப்படி பட்ட நாடுகளில் செயல்படுத்தப்படும் பொருளாதார கொள்கைகளை நமது நாட்டில் இறக்குமதிசெய்வது என்பது எப்படி பொருத்தமாக இருக்கும்?
அமெரிக்கபாணி பொருளாதாரம், சொந்த நாட்டிலேயே தோல்வியை சந்தித்துள்ளது . அமெரிக்காவில் சுகாதார காப்பீடு 2019ம் ஆண்டு திவாலாகும். ஓய்வூதியநிதி 2033-ம் ஆண்டில் திவலாகும் ஒரு சூழல் நிலவுகிறது . இந்த சூழலில் அமெரிக்கபாணி பொருளாதாரத்தை ஏன் பின் பற்ற வேண்டும்? என குருமூர்த்தி கேள்வி எழுப்பினர் .
விவேகானந்தா ஆய்வு மையத்தின் நோக்கம்குறித்து அதன் அமைப்பாளர் பல்பீர் புஞ்ச், பாரதிய ஜனதா தேசிய தலைவர் நிதின்கட்கரி உள்ளிட்டோர் பேசினர். இந்நிகழ்ச்சி குறித்து பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி பெருமிதம் தெரிவித்தார்.
சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ... |
1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ... |
மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.