கடந்த 2008 நவம்பர், 26ல் மும்பை தீவிரவாத தாக்குதல் வழக்கில், மரண தண்டனை விதிக்கபட்ட, லஷ்கர்இ – தொய்பா தீவிரவாதி , அஜ்மல் கசாப், தனக்கு கருணை காட்டக் கோரி அனுப்பிய கருணை மனுவை மத்திய உள் துறை அமைச்சகம் நிராகரித்துள்ளது.
சென்ற 2008 நவம்பர், 26ல், மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் லஷ்கர்இ – தொய்பா தீவிரவாதிகள், 10 பேர் தாக்குதல் நடத்தினர். இந்தபடுபயங்கர தாக்குதலில், 166 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அதேநேரத்தில், காவல்துறை நடத்திய பதில் தாக்குதலில், தீவிரவாதிகள் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் மட்டும் சிக்கினான். அவனுக்கு சுப்ரீம் கோர்ட், ஆகஸ்ட், 29ல், மரண தண்டனையை விதித்து உறுதி செய்தது.
இந்த நிலையில், தனக்கு கருணை காட்டகோரி, ஜனாதிபதிக்கு மனுஒன்றை அனுப்பினான். இந்தமனு கடந்த செப்டம்பர் மாதம் மகாராஷ்டிர உள் துறை அமைச்சகத்தால் நிராகரிக்கபபட்டது. பிறகு இந்த மனு, முதல்வர் அலுவலகம் மூலமாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டது. தற்போது கசாப்பின் கருணை மனுவை மத்திய உள் துறை அமைச்சகம் நிராகரித்துள்ளது. மேலும், ஜனாதிபதியும் கசாப்பின் கருணை மனுவை நிராகரிக்கும்படி பரிந்துரை செய்துள்ளதாக தெரியவருகிறது.
இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ... |
கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது. |
உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.