நிலக்கரி ஊழலின் மூலமாக தங்களது முகத்தில் கரியை பூசிக் கொண்ட காங்கிரஸ் அதை மறைப்பதற்கு பாரதிய ஜனதா . தலைவர் நிதின் கட்காரியின் மீது வீண்பழி சுமத்துவதாக பாரதிய ஜனதா தலைவர் சுஷ்மா சுவராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.
ஹிமாச்சல தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மேலும் அவர் பேசியதாவது, மத்திய அரசு அத்தியாவசிய பொருட்களின் விலையை_உயர்த்திமக்களின் முதுகெலும்பை உடைத்துள்ளது. காமன்வெல்த் ஊழல், 2 ஜி ஊழல் , நிலக்கரி சுரங்க ஊழல் போன்றவற்றின் மூலம் காங்கிரஸ் கூட்டணி அரசு 4 லட்சத்து . 38 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல்செய்து, ஊழலில் தங்களது பழைய சாதனைகளை முறியடித்துள்ளது.
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு காங்கிரஸ் கட்சியின் தவறான கொள்கைகள்தான் காரணம். அக்கட்சியுள்ள தலைவர்களே ஊழலுக்கு காரணம். இவை இரண்டும்தான் மத்திய அரசின் சாதனை . பிரதமர் கூறுவதை போன்று பணம் மரத்தில் காய்ப்பது இல்லைதான். ஆனால், காங்கிரஸ் கட்சி தலைவர்களின் சட்டைபைகளில் நிறைந்துள்ளது.
நிலக்கரி ஊழல் போன்று பல ஊழல்கள் மூலம் தங்கள் முகத்தில் கரியை பூசிக் கொண்ட காங்கிரஸ் கட்சி அதைமறைக்க பாரதிய ஜனதா தலைவர் நிதின் கட்காரியையும் ஊழல் தலைவராக சித்தரிக்க முயற்சி செய்கிறது . காங்கிரஸ்சின் குற்றச்சாட்டுக்கு எல்லாம் பயந்து கொண்டு கட்காரி வீட்டில் அமர்ந்து விடவில்லை. மீடியாக்களை தனிமனிதராக சந்தித்து தாம் குற்றமற்றவர் என்பதை உறுதிசெய்துள்ளார்.
தற்போதுள்ள அரசியல் தலைவர்களில் தம்மீது விசாரணை நடத்தலாம் என்று தாமாகவே வலியவந்து தெரிவித்த தலைவர் கட்காரி ஒருவர்தான் என்று சுஷ்மா தெரிவித்துள்ளார்.
சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ... |
அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ... |
சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.