கர்நாடகாவில் எடியூரப்பா தயவினால் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வரவில்லை, பாரதிய ஜனதாவின் கொள்கைளுக்குதான் மக்கள் வாக்களித்தார்கள் என்று வெங்கய்யா நாயுடு கருத்து தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் நிலக்கரி சுரங்க ஊழலின் காரணமாக தனது முதல்வர்
பதவியை இழந்த எடியூரப்பா பாரதிய ஜனதாவிலிருந்து விலக முடிவுசெய்துள்ளார். டிசம்பர் 9ம் தேதி புதியகட்சி அறிவிப்பு தொடர்பாக மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து பாஜக முன்னணி தலைவர்களில் ஒருவரான வெங்கய்யா நாயுடு செய்தியலகளிடம் தெரிவித்ததாவது ; எடியூரப்பாவின் தயவால் கர்நாடகவில் பாஜக ஆட்சிக்கு வரவில்லை. பாஜகவின் கொள்கைளுக்காகத்தான் மக்கள் வாக்களித்தனர். கொள்கைகள்தான் மக்களுக்கு முக்கியம். கர்நாடக மாநில மக்களும் இதை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
எடியூரப்பாவுக்கு பாஜக முழு ஆதரவு தந்தது. அவர் புதியகட்சி தொடங்க முடிவுசெய்தால் அது அவரது விருப்பம். இவ்வாறு வெங்கய்யா நாயுடு கூறினார்.
மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ... |
காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ... |
முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.