மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியை (சி.ஏ.ஜி.) கேலிசெய்து பேசி வருவது கண்டிக்க தக்கது என்று பா.ஜ.க. செய்திதொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது ; ப. சிதம்பரம் ஆரம்பத்தில் 2ஜி விவகாரத்தை வைத்து சிஏஜி.யை கேலிசெய்து பேசினார். இப்போது நிலக்கரி சுரங் ஊழல் விவகாரத்திலும் சிஏஜி.யை கேலிசெய்யும் விதமாக ப. சிதம்பரம் பேசிவருகிறார்.
சிஏஜி.யை கேலிசெய்து பேசுவதால் காங்கிரஸ் அரசு தப்பிவிட முடியாது. இந்திய அரசியலமைப்பு உருவாக்கிய தன்னாட்சி அமைப்புகளின் மீதும், ஊழலை வெளியிடுபவர்கள் மீதும் காங்கிரஸ் வசைமாரி பொழிந்துவருகிறது. 2ஜி ஊழலில் சிதம்பரத்திற்கு இருக்கும் தொடர்புகள் குறித்து, தன்னை அவர் விசாரணைக்கு உட்படுத்தி கொள்ளாமல், தப்பி ஓடுவதற்கு முயல்கிறார்.
எப்படி காங்கிரஸ் அரசாங்கம் கொள்ளை அடிக்கிறது என்பதை இந்த நாடு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள், காங்கிரஸ் ஆட்சியின் நினைவுச்சின்னமாக நிலக்கரி சுரங்க ஊழல் உள்ளது. மக்கள் இந்த ஆட்சியை தண்டிக்கும் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள் என்று அவர் கூறினார்.
இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ... |
மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ... |
தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.