சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது குறித்து வாக்கெடுப்புடன் கூடிய விவாதத்துக்கு அனுமதி தந்தால் மட்டுமே, நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்த ஒத்துழைப்பு தருவோம் என பா.ஜ.க மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன .
இது குறித்து அருண் ஜேட்லி தெரிவித்ததாவது : நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்த அரசு விரும்ப வில்லை. எனவேதான், எந்தக்கொள்கை மீதும் வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த அனுமதி மறுக்கபடுகிறது . நாடாளுமன்றத்தில் வாக் கெடுப்பு நடத்தாமல், சில்லறை வர்த்தகத்தில் அன்னியநேரடி முதலீட்டை அமல்படுத்தக் கூடாது.
இது அமல்படுத்தப் பட்டால், உற்பத்தித் துறை முதலில் பாதிக்கப்படும். வேலை யிழப்பு ஏற்படும். கடைகள் அமெரிக்காவை சேர்ந்ததாக இருக்கும் ; பொருள்கள் சீனாவிலிருந்து வரும். இந்தியா விற்பனையாளராக மட்டும் இருக்கும். இந்திய பொருளாதார சீர்திருத்தம் நம்மால் வடிவமைக்கப்பட்டதாகவும் , நமக்கானதுமாகவும் இருக்க வேண்டும் என்றார் ஜேட்லி.
சீதாராம் யெச்சூரி கூறியது: எங்களுக்குள் அரசியல் ரீதியில் கொள்கைவேறுபாடு இருக்கலாம். ஆனால், இது நாட்டுக்கு கவலை அளிக்கக்கூடிய பிரச்னை என்பதால், இணைந்து செயல் படுவோம். பாஜக, கம்யூனிஸ்ட்க்குள் கருத்தொற்றுமை இல்லா விட்டால், ஒரேமேடையில் அமர்ந்திருக்க மாட்டோம். நாட்டின் நலன்கருதியே அன்னிய நேரடி முதலீட்டுக்கொள்கையை எதிர்க்கிறோம் என்றார்.
உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ... |
பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ... |
ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ... |
Leave a Reply
You must be logged in to post a comment.