5 ஆண்டுகளில் 50 லட்சம் வீடுகள் வழங்கப்படும் பாஜக தேர்தல் அறிக்கை

 5 ஆண்டுகளில் 50 லட்சம் வீடுகள் வழங்கப்படும்  பாஜக தேர்தல் அறிக்கை குஜராத் சட்ட சபை தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் ஆளும் பா.ஜ.,தரப்பில் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது இதில் பல நல்ல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன இது வரைக்கும் எந்த கட்சியும் அறிவிக்காத ஏழைகளுக்கு குறைந்தவிலையில் வீடுவழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி

தரப்பட்டுள்ளது . ஏற்கனவே இதுவரைக்கும் இந்த திட்டத்தின் படி 2 2 லட்சம் பேருக்கு வீடு வழங்கப்பட்டுள்ளது , இன்னும் 5 ஆண்டுகளில் 50 லட்சம் வீடுகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்க பட்டுள்ளது.

பாஜக,.வின் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்;

– மாநிலத்தில் இருக்கும் அனைத்து குடிமக்களும் குரூப் இன்சூரன்ஸ் திட்டத்தின்கீழ் கொண்டுவரப்படுவர்

– 50லட்சம் வீடுகள் அடுத்த 5 ஆண்டுகளில் கட்டித் தரப்படும். கிராமப்புறங்களில் 28 லட்சம் வீடுகளும் நகரப்பகுதியில் 22 லட்சம் வீடுகளும் கட்டப்படும்.

– கடந்த பத்து ஆண்டுகளில் உருவாக்கப் பட்டிருக்கும் புதிய நடுத்தரவர்தக்கத்தின் பிரச்சனைகளுக்கு தீர்வுகாணப்படும்.

– அடுத்த ஐந்து ஆண்டுகளில் குஜராத்தை ஜவுளித் துறையில் முதன்மை மாநிலமாக உருவாக்குவோம்

– வறட்சிமிகுந்த செளராஷ்டிரா பகுதியில் இருக்கும் அனைத்து அனைகளுக்கும் அடுத்த மூன்று ஆண்டுகளில் நர்மதை ஆற்றுநீர் கொண்டு செல்லப்பட்ம்.

– வரும் 5 ஆண்டுகளில் 16 லட்சம்ஹெக்டேர் பரப்பு விளை நிலமாக்கப்படும்

– விவசாயிகளின் கடன்களுக்கான வட்டியை அரசு பகிர்ந்துகொள்ளும்

– அனைத்து மாவட்டங்களிலும் வேளாண் விளை பொருட்களுக்கான குளிர் பதன கிடங்குகள் அமைக்கப்படும்.

– மின் உற்பத்தியில் மின் மிகு மாநிலமாக இருக்கும் குஜராத், அடுத்த 5 ஆண்டுகளில் தற்போதைய மின்உற்பத்தியை இருமடங்காக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

– 30 லட்சம் பெண்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.

– மரபு சாரா எரி சக்தி உற்பத்தியில் குஜராத் தொடர்ந்து முதலிடம்வகிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

– ராஜ்கோட், சூரத், வதோதராவில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனைகள் அமைக்கப்படும்

– சுயதொழில் தொடங்கும் இளைஞர்களுக்கான வங்கிக்கடனுக்கு அரசு உதவும்

என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வறுமை ஒழிப்புக்கு சொத்துரிமை அ ...

வறுமை ஒழிப்புக்கு சொத்துரிமை அவசியம் – பிரதமர் மோடி 'உலகம் முழுவதும் சொத்துரிமை ஒரு பெரிய சவாலாக உள்ளது, ...

ஒடிசா மாநில அரசுடன் சிங்கப்பூர ...

ஒடிசா மாநில அரசுடன் சிங்கப்பூர் அதிபர் ஒப்பந்தம் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் ...

பிப்ரவரி 1ம் தேதி மத்திய அமைச்ச ...

பிப்ரவரி 1ம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் பிப்.1ம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய ...

இந்தியாவின் ஆட்டோ மொபைல் துறைய ...

இந்தியாவின் ஆட்டோ மொபைல் துறையின் வளர்ச்சி : ரத்தன் டாட்டாவை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சிக்கு தொழிலதிபர் ரத்தன் டாடா ...

பெங்களூரில் அமெரிக்க தூதரகம் த ...

பெங்களூரில் அமெரிக்க தூதரகம் திறந்துவைப்பு பெங்களூருவில் அமெரிக்க துணை தூதரகம் திறக்கப்பட்டது. இப்போதைக்கு விசா ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் எம்:ஜி:ஆர் – பிரதமர் மோடி புகழாரம் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி ...

மருத்துவ செய்திகள்

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...

வெண் தாமரைப் பூ

இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ...