அன்னிய முதலீட்டை அனுமதிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி மக்களிடம் விளக்கும் வகையில் வரும் 21ம் தேதி முதல் தேசியஅளவில் பிரசாரம் மேற்கொள்ளப்படும். பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் இது திரும்பபெறப்படும் என்று பாஜக மூத்த தலைவர் வெங்கய்யா நாயுடு கருத்து தெரிவித்துள்ளார்.
நேற்று சென்னையில் இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது; சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது குறித்து கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின்போது 18 கட்சிகள் மட்டுமே ஆதரவு தெரிவித்தன. 14 கட்சிகள் எதிர்ப்புதெரிவித்தன.
சில்லரை வணிகத்தை ஆதரித்த தி.மு.க, பி.எஸ்.பி கட்சிகள்கூட தற்போது பல்டி அடித்துள்ளன. அன்னிய முதலீடு வந்தால் இந்தியவிவசாயிகள், நுகர்வோர் , சில்லரை வணிகர்கள் மற்றும் இந்திய பொருளாதாரம் பாதிக்கப்படும்.குறிப்பாக வேலையில்லா திண்டாட்டம் உருவாகும் . அன்னிய முதலீட்டை அனுமதித்தால் ஏற்படும்பாதிப்புகள் பற்றி மக்களிடம் விளக்கும்வகையில் நாடாளுமன்ற கூட்டதொடர் முடிந்ததும், அதாவது வரும் 21ம்தேதி முதல் தேசிய அளவில் பிரசாரம் மேற்கொள்ளப்படும்.
பாஜக ஆட்சிக்கு வந்தால் இது திரும்பபெறப்படும். தீவிரவாதிகளுக்கு ஆயுதபயிற்சி, நிதி உதவிசெய்வதை உடனடியாக நிறுத்தவேண்டும் என்பதை பாகிஸ்தானிடம் மத்திய அரசு தைரியமாக தெரிவிக்கவேண்டும். தீவிரவாதத்துக்கு எதிராக சர்வதேச அளவில் பொதுகருத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மானியம் வங்கிகளின் மூலமாக பணமாக வழங்க படும் என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.ஆனால் இந்தியாவில் 33சதவீதம் பேர் மட்டுமே வங்கியில் கணக்குவைத்துள்ளனர். கிராமங்களில் போதியவங்கிகள் கிடையாது. இந்த திட்டம் மக்களுக்கு பயன் அளிக்காது. இவ்வாறு வெங்கய்யா நாயுடு கருத்து தெரிவித்தார்.
இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ... |
முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ... |
தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே இல்லை. மேலும் தண்ணீர் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.