சிங்கக்குட்டிகள் போல இளைஞர்களையும் , மாணவர்களையும் துள்ளிக்க செய்த திலகர்

சிங்கக்குட்டிகள் போல இளைஞர்களையும் , மாணவர்களையும் துள்ளிக்க செய்த திலகர் அந்நிய ஆங்கில அரசுக்கு இந்தியர்கள் மனு மட்டுமே அனுப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் ஆங்கிலேயரான ஏ.ஓ.ஹ்யூம் என்பவரால் 1885இல் துவக்கப்பட்ட காங்கிரஸ் இயக்கத்தைச் சுதந்திரப் போராட்ட இயக்கமாக மாற்றிய பெருமை திலகரையே சாரும். என  முந்தைய பதிவுகளில் பார்த்தோம்.

 

பாரதத்திற்கு சுதந்திரமே கொடுக்கக்கூடாது ,என்று வெள்ளையர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸ், திலகர் மூலம் புத்துயிர் பெற்றது, இந்த சமயத்தில் பல இளைஞர்கள் சுதந்திரத்திற்காக போராடினார்கள், நாடெங்கிலும் பல இடங்களில் வெள்ளையர்கள் நம்மவர்களால் தாக்கப்பட்டனர்,

நிலைமை மிக மோசமாக இருந்ததால் வெள்ளையர்கள் காங்கிரஸினை கலைக்கத் திட்டமிட்டனர். இதற்காகவே 1907 ல் சூரத்தில் காங்கிரஸ் மாநாடு ஒன்றினை நடத்துவது என திட்டமிட்டனர்,

பதவி சுகம் கண்ட சில தலைவர்கள் காங்கிரஸினை கலைக்க வேண்டாம் என்றும், திலகரை காங்கிரஸிலிருந்து நீக்கிவிடலாம் என்றும் அரசாங்கத்திற்கு யோசனை தெரிவித்தனர். இவர்கள்தான் பிற்காலத்தில் மிதவாதிகள் என்று மரியாதையுடன் அழைக்கப்பட்டனர்.

1907 ல் சூரத்தில் நடக்கவிருந்த காங்கிரஸ் மாநாட்டிற்கு, வ.உ.சி. , பாரதியார், உள்ளிட்ட தமிழகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார் திலகர் திலகரின் அழைப்பினை ஏற்று வ.உ.சி. உள்ளிட்ட தலைவர்கள் சூரத் சென்றனர்.

சுயராஜ்யம் எமது பிறப்புரிமை, அதை அடைந்தே தீருவோம் என்று வெள்ளையனை எதிர்த்து வீரமுழக்கமிட்ட திலகரை காங்கிரஸில் இருந்து காங்கிரஸ்காரர்கள் மூலமாகவே விரட்டியடிக்க ஏற்பாடு செய்யப்பட்டதுதான் இந்த சூரத் மாநாடு.

மாநாடு தொடங்கியதும், ஒவ்வொரு முறையும் திலகரின் வாதத்திற்கு யாராலும் எதிர்வாதம் பண்ணமுடியவில்லை. திலகரின் வாதத்தால் இளைஞர்கள் சிலர் மேலும் ஈர்க்கப்பட்டனர், பொறுக்க முடியாத பதவி வெறிபிடித்த தலைவர்கள் (வெள்ளைக்கார அடிவருடிகள்), திலகரை இனியும் பேசவிட்டால் ஆபத்து என்று எண்ணி திலகரை தரக்குறைவாக பேசத்தொடங்கினார்கள். திலகருக்கு தனிகோஷ்டி உருவானது, திலகர் கோஷ்டியில் வ.உ.சிதம்பரம்பிள்ளை, விபின் சந்திரபால், லாலா லஜபதிராய், உள்ளிட்ட தலைவர்கள் இருந்தனர்,

திலகரின் கை ஓங்குவதை பொறுக்கமுடியாத வெள்ளைக்கார அடிவருடிகள் திலகரைத் கற்களால் தாக்கத் தொடங்கினார்கள். இப்போது திலகரை காத்த பெருமை வ.உ.சிதம்பரம்பிள்ளை என்ற தமிழனையே சாரும். திலகர் மீது ஒரு அடி பட்டவுடன் அந்த இடமே போர்க்களமாக மாறியது,

முடிவில் காங்கிரஸ் இரண்டாகப் பிரிந்தது,

வெள்ளைக்கார அடிவருடிகளின் அணி INDIAN NATIONAL CONGRESS என்றும், திலகர் தலைமையிலான அணி INDIAN NATIONAL CONFERENCE, என்றும், பிரிந்தது,

திலகர் தலைமையிலான INDIAN NATIONAL CONFERENCE உறுப்பினர்கள் தீவிரவாதிகள் என்றும் ,வெள்ளைக்கார அடிவருடிகளின் INDIAN NATIONAL CONGRESS உறுப்பினர்கள் மிதவாதிகள் என்றும் அழைக்கப்பட்டனர். திலகரின் தலைமையில் மீண்டும் சுதந்திரப்போராட்டம் தொடங்கியது.

 
நாட்டு இளைஞர்களுக்கு போராட்ட உணர்ச்சியை தூண்டுவதர்க்காக தாம் நடத்திய "கேசரி" பத்திரிகையில் அற்புதமான பல கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வந்தார், 1893ஆம் ஆண்டில் கணபதி உற்சவத்தையும் 1897 ஆம் ஆண்டில் சிவாஜி உற்சவத்தையும் கொண்டாடும் வழக்கத்தினை தொடங்கி வைத்தார்,

1897 ஆம் ஆண்டில் சிவாஜி உற்சவத்தை தொடங்கி வைத்துப் பேசிய திலகர்

" பகவத்கீதையில் கண்ணன் காட்டும் வழி என்ன?
சுயநல கலப்பில்லாத பொதுநலத்திற்காகவும் தேச
நன்மைக்காகவும் நமது உறவினர்களையும்
ஆசிரியர்களையும் கூட கொல்லலாம், அதனால் பாவம்
இல்லை என்பதுதான்,

சிவாஜி அதைத்தான் செய்தார், நாட்டு நலனுக்காகவே
அப்சல்கானை அவர் கொன்றார்.

நம் வீட்டில் திருடர்கள் புகுந்தால் அவர்களிடமிருந்து
நம்மை பாதுகாத்துக் கொள்ள நமக்குப் பலம் வேண்டாமா?
பலம் இல்லாவிட்டால் திருடர்களை வீட்டுக்குள் அடைத்து
கதவைப்பூட்டி வீட்டோடு அவர்களையும் சேர்த்து நெருப்பு
வைத்துக் கொளுத்திட தயங்கலாமா?

ஆங்கிலேய மிலேச்சர்களுக்கு நமது புனிதமான பாரதத்
திருநாட்டில் ஆளுகின்ற அதிகாரத்தினை யார்
வழங்கினார்கள்?

திருடர்களைப் போல நம் நாட்டுக்குள் புகுந்து , நமது
பூமியைக் கைப்பற்றி , நம்மையே ஆளுவதாக அவர்கள்
பாசாங்கு செய்வதை நாம் அனுமதிக்கலாமா?

இளைஞர்களே கிணற்றுத்தவளைகளை போல உங்கள்
பார்வைகளை குறுக்கிக் கொண்டு ஆட்சியாளர்களின்
அக்ரமங்களை சகித்துக் கொண்டிருப்பதைக் கைவிடுங்கள்,
விழித்து எழுங்கள்- உறக்கத்திலிருந்து விழித்து எழுங்கள்,
அறியாமையிலிருந்து விழித்து எழுங்கள்,
கோழைத்தனத்திலிருந்து விழித்து எழுங்கள்,

கீதை போதிக்கும் புன்னியத்திருப்பணியை மணத்தல்
எண்ணுங்கள்! மகத்தான பாரத நாட்டின் மஹாபுருஷர்களின்
சாதனைகளை நினைவு கூறுங்கள் " என்று முழங்கினார்.

ஆதாரம் (கேசரி 1897 ஜூன் 15 )

இந்த முழக்கம் பல இளைஞர்களின் இதயத்தில் குத்தீட்டி போலப் பாய்ந்தது, சிங்கக்குட்டிகள் போல எண்ணற்ற இளைஞர்களும், மாணவர்களும் துள்ளிக்குதித்து எழுந்தனர், அப்படி எழுந்த இளைஞர்களில், "சாபேகர் சகோதரர்கள்" குறிப்பிடத்தக்கவர்கள்,

நன்றி ; ராம்குமார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கைக் காயின் மருத்துவ குணம்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ...

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...