கான்ஸ்டபிள் தோமர் மரணம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடவேண்டும். பாலியல் பலாத் காரத்தால் பாதிக்கப்பட்ட பெண் மீதோ, தோமர்_மீதோ அவருக்கு சிறிதும் அக்கறை யில்லை என டெல்லி மாநில பா.ஜ.க தலைவர் விஜேந்தர குப்தா கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது ; காவலர் தோமர் மரணம் குறித்து, உள் துறை அமைச்சர், உள்துறை செயலாளர் , முதல்வர், போலீஸ்கமிஷனர், துணை கலெக்டர், டாக்டர் உள்ளிட்ட அனைவரும் வெவ் வேறு கருத்துக்களை தெரிவிக்கின்றனர். இதை பார்க்கும்போது, இவர்கள் எல்லாரும் ஒருசதியை மறைக்க முயற்சிக்கின்றனரோ என சந்தேகம் எழுகிறது .
இதனால் தோமர் மரணம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடவேண்டும். அப்போது தான் உண்மை தெரியும். தவறுகளையும், தோல்விகளையும் மறைக்க அரசும் காவல்துறையும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சுமத்தி கொள்கின்றனர்.
தோமரின் பிரேதபரிசோதனை அறிக்கை வருவதற்க்கு முன்பாகவே , மார்பு மற்றும் வயிற்றில் ஏற்பட்ட காயங்களால் தான் இறந்தார் என காவல்துறை கமிஷனர் கூறுகிறார். மேலும், தோமர் சாவை கொலை வழக்காக பதிவுசெய்து 8 பேர் மீது வழக்கு பதிவுசெய்துள்ளதாகவும் கமிஷனர் தெரிவித்துள்ளார்.
தோல்விகளை மறைக்க அப்பாவிகள் மீது பழியை போடுகிறாரா என நினைக்கதோன்றுகிறது. இந்த விவகாரத்தில் அரசியல் ஆதாயம்தேட முதல்வர் ஷீலா தீட்சித் முயற்சி செய்கிறார் . பாலியல் பலாத் காரத்தால் பாதிக்கப்பட்ட பெண் மீதோ, தோமர்_மீதோ அவருக்கு சிறிதும் அக்கறை யில்லை. இப்படி அரசு செயல்படுவது ஜனநாயகத்துக்கே வெட்கக் கேடு என்று விஜேந்தர குப்தா கூறியுள்ளார்.
பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ... |
ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ... |
இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.