அவர் ஒரு வீரத்துறவி. அவரிடம் வீரர்களுக்கு உரிய பண்புகளையே முதலில் பார்த்தேன்

கண்களைக் கவரும் வடிவம், மஞ்சளும் சிவப்பும் கொண்ட வண்ண உடை அணிந்தது, சிகாகோவில் இருண்ட ஆகாய மண்ட லத்தின் நடுவில் இந்தியாவின் ஞானசூரியன் போலத்திகழ்வது, ஊடுருவி நோக்கும் கண்கள், வேகத் தோடு விரைந்தெழும் இயக்கங்கள் இது சிகாகோ சர்வசமயப் பேரவை யில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகள் உபயோகிப்பதற்கு என்று

 

ஒதுக்கி யிருந்த அறைகளில் ஒன்றில், நான் சுவாமி விவேகானந்தரைப் பார்த்த போது என் உள்ளத்தில் தோன்றிய எண்ணமாகும்.

அவர் ஒரு வீரத்துறவி. ஆம், அவரிடம் நான் வீரர்களுக்கு உரிய பண்புகளையே முதலில் பார்த்தேன். அவர் சிகாகோ சர்வசமயப் பேரவையில், சொற்பொழிவு மேடையை  விட்டுச் சற்றுத் தள்ளி உட்கார்ந்திருந்தார். அவரது உருவம், இந்தியாவின் பண்புகளையும் பெருமைகளையும் தாங்கியிருந்தது.

இன்று இருக்கும் மதங்களில் மிகவும் பழமை வாய்ந்த இந்துமதத்தின் பிரதிநிதி அவர்; இந்திய மகனாகிய அவர், இந்தியாவின் தூதராக இந்தியத் தாயின் செய்தியை சிகாகோ சர்வ சமயப் பேரவைக்குக் கொண்டு வந்திருந்தார். அங்கு அவர், அந்த இந்தியத் தாயின் பெயரால் சொற்பொழிவு நிகழ்த்தினார்.

அவரது இந்துமத விளக்கச் சொற்பொழிவு களைக் கேட்டு, சிகாகோ சர்வசமயப் பேரவையில் கலந்துகொள்ள வந்திருந்த மக்கள் எல்லோரும் மிகவும் ஆச்சரியப்பட்டார்கள். அந்தப் பேரவையில் விவேகானந்தரின் சொற்பொழிவு முடிந்தபிறகு வெளியே வநத ஒருவர், ""இந்த மனிதரா கதியில்லாத இந்துமதத்தைச் சேர்ந்தவர்! இவரைச் சேர்ந்த இந்திய மக்களுக்கு நாம் போய்க் கிறிஸ்துவப் பாதிரிமார்களை அனுப்பி வைக்கிறோமே! அவர்கள் நமக்கு இந்துமதப் பிரசாரகர்களை இங்கு அனுப்பி வைப்பதுதான் மிக வும் பொருத்தமாக இருக்கும்'' என்று கூறினார்.

விவேகானந்தரைப் பற்றி  அன்னி பெசண்ட் அம்மையார் கூறியது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ...

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...