மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் மூளையாகசெயல்பட்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த தீவிரவாதி டேவிட்ஹெட்லிக்கு அமெரிக்காவின் சிகாகோ நீதிமன்றம் 35 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கியது . இதற்க்கு பாஜக தனது அதிர்ப்ப்தியை தெரிவித்துள்ளது ஹெட்லிக்கு வழங்கப்பட்ட தண்டனை திருப்தியளிக்கவில்லை என கூறியுள்ளது.
இதுகுறித்து பாஜக செய்தித்தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி தெரிவித்ததாவது:-
இந்தியமண்ணில் ஆறு அமெரிக்கர்களை கொன்றதற்காக ஹெட்லிக்குஅமெரிக்கா 35 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கியிருக்கலாம். ஆனால், மும்பையில் 2008-ல் நடந்த தாக்குதல் சம்பவத்தில் 166 பேரை கொன்றதற்க்கு நீதி கிடைக்கவேண்டும்.
ஹெட்லியை இந்தியாவிற்கு கொண்டுவந்து தண்டனை வழங்கினால்_மட்டுமே இது சாத்தியமாகும் அமெரிக்க சட்டத்தின்படி மட்டுமே தற்போது தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அஜ்மல்கசாபுக்கு வழங்கப்பட்டதை போன்று ஹெட்லிக்கும் இந்திய சட்டத்தின் கீழ் விசாரித்து மரணதண்டனை வழங்கப்பட வேண்டும்.
இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் இந்தியமண்ணில் நடந்ததால் அரசு இனியும் தாமதம் செய்யாமல் ஹெட்லியை இந்தியாவிற்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். என்று கேட்டுக்கொண்டார்.
Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ... |
இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ... |
இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ... |
Leave a Reply
You must be logged in to post a comment.