சமூக நல்லிணக்கத்தினை வலியுறுத்தி பிப்ரவரி இறுதியில் பாத யாத்திரை

சமூக நல்லிணக்கத்தினை வலியுறுத்தி    பிப்ரவரி இறுதியில் பாத யாத்திரை  சமூக நல்லிணக்கத்தினை வலியுறுத்தி, தர்மபுரியை சுற்றி இருக்கும் மாவட்டங்களில் பிப்ரவரி இறுதியில் பாத யாத்திரையை நடத்த உள்ளதாக பா.ஜ.க,, மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் மேலும் இது குறித்து அவர் தெரிவித்ததாவது. தமிழக அரசின் ஒரு வருட நிலைப்பாட்டினை , கவர்னரின் உரை வெளிப்படுத்துகிறது. விவசாயிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்; அவர்களுக்காக, கர்நாடகாவிடம் இழப்பீடுகோரி வழக்குதொடர, அரசு தயாராகி வருகிறது. இதிலிருந்து, விவசாயிகள் இழப்புக்குள்ளாகி உள்ளதை , அரசு தெரிந்துள்ளது. விவசாயிகளுக்கு, இழப்பீடு முன்பணம் வழங்கவேண்டும்.

மதுரையில் பயங்கரவாதிகளின் நடமாட்டம், வெடிகுண்டுசோதனை நடப்பது தெரிந்தும், நடவடிக்கை இல்லை. அரசியல் தலைவர்கள் தாக்குதலுக்கு உள்ளாவதும் , கொலைசெய்யப்படுவதும் சாதாரணமாகி விட்டது. பலவழக்குகளில், குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை.

சிறையில் இருந்தபடியே குற்றவாளிகள், கொலைகளில் ஈடுபடுவது மக்களை அதிர்ச்சிகுள்ளாக்கி உள்ளது . சட்ட ஒழுங்கை காக்கும் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

குறைவான மழைப்பொழிவை கொண்ட குஜராத்தில், தண்ணீர் பற்றாக்குறை உருவாகாமல் சமாளிக்கப்படுகிறது. தமிழகத்தில் போதிய மழைபெய்தும், தண்ணீரை சேமிப்பதற்கு தடுப்பணைகள், அணைகள் கட்டப்படவில்லை. பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத்சிங், பிப்., 7 ம் தேதி , சென்னை வருகிறார். சமூக நல்லிணக்கத்தினை வலியுறுத்தி, தர்மபுரியை , சுற்றி இருக்கும் மாவட்டங்களில் பாதயாத்திரை செல்ல உள்ளேன் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

அரச இலையின் மருத்துவக் குணம்

அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ...

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...