உடையவர் என்றும் எதிராஜர் என்றும் இவர் அழைக்கப்படுகிறார். ஸ்ரீபாஷ்யம் என்ற விஷிட்டாத்வைத உரையை இவர் எழுதியதால் "பாஷ்யகாரர்" என்றும் அழைக்கப்படுகிறார். கி.பி. 1017 ல் பிறந்த இவர் மிகச்சிறந்த அறிவாளியாகவும், ஜாதிகளுக்குள் குறுகி போகாத பரந்த எண்ணங்களை கொண்டவராகவும் இருந்தார்.
இவர் பிறந்த காலம் ஜாதிக்கட்டுபாடுகள் மிக அதிகமாய் உலா வந்து கொண்டிருந்த நேரம்.
இராமானுஜர் ஜாதிகளை கடந்தவராய் இருந்தார். இறைவனிடம் அர்ப்பனிப்பு உணர்வே மிக முக்கியம் என நம்பினார். சிறு வயதில் விஷ்னுவுக்கு சேவை செய்யும் கஞ்சிபூர்னா எனும் தாழ்த்தப்பட்ட குலத்தை சேர்ந்த ஒருவரின் அர்ப்பனிப்பு உணர்வில் மயங்கி, அவர் தமக்கு குருவாக வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். பின்நாளில் அந்த கஞ்சிபூர்னா என்பவர்தான் இராமானுஜருக்கு "யமுனாசார்யா" எனப்படும் வைணவ குருவை சந்திக்குமாறு பரிந்துரைக்கிறார். அங்கு சென்றதன் விளைவால் தான் இராமானுஜர், பிரம்ம சூத்திரத்திற்கு உரை எழுதி பாஷ்ய (உரை) காரர் என்று அழைக்கப்படுகிறார்.
இராமானுஜர் மிகச் சிறந்த அறிஞர், ஞானி, வேத விற்பன்னர், அவரின் தத்துவ ரீதியான பங்களிப்பை பற்றி எழுதி தீராது. அவற்றை விளக்க நமக்கு அறிவும் போதாது. ஆனால் இவை எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் ஒரு சிறந்த மனிதராய் இருந்தார். குறிப்பாக நம் நாட்டில் தீண்டாமைக்கு எதிராக போரிட்ட முதல் மனிதர் என்று அவரை சொன்னால் மிகை ஆகாது.
இராமானுஜர் திருமந்திரத்தின் இரகசியத்தை அறிய 18 முறை திருக்கோட்டியூர் நம்பியிடம் செல்கிறார். 18வது முறை அதை உபதேசித்த திருக்கோட்டியூர் நம்பி, அதை யாரிடமும் சொல்லக்கூடாது என்று இராமானுஜரிடம் சத்தியம் வாங்குகிறார். அந்த திருமந்திரத்தை கேட்பவர்களுக்கு வைகுண்டம் கிடைக்கும் என்ற ஆழமான நம்பிக்கை இருந்தது. ஆனால் குருவிடம் சத்தியம் செய்துவிட்டு அதை யாருக்காவது வெளிப்படுத்தினால் அவர்கள் நரகத் தீயில் தள்ளப்படுவார்கள் என்று சாஸ்திரமும் இருந்தது.
இராமானுஜர் திருமந்திரத்தை பெற்றுக்கொண்டு வருக்கிறார் என்ற செய்தியும் பரவியது. பலர் கூடி இராமானுஜரை அதை குறித்து கேட்டனர். இராமானுஜரோ அவர்களை திருக்கோஷ்டியூரில் உள்ள தெற்காழ்வான் மண்டபத்திற்கு அழைத்து அந்த திருமந்திரத்தை வெளிப்படுத்தினார்.
பதறி போய் ஓடிவந்தார் திருக்கோட்டியூர் நம்பி, "என்ன பாதகம் செய்தாயடா இராமானுஜா, உனக்கு நரகத்தீ உறுதி" என்றார். இராமானுஜர் பனிவோடு சொன்னார், " மன்னியுங்கள் குருவே, திருமந்திரத்தின் சக்தியை நான் அறிவேன், ஆனால் நான் ஒருவன் நரகத்தீயில் வீழ்ந்தால் என்ன, இத்தனை பேர் நற்கதி அடைகிறார்களே" என்று.
இராமானுஜர் திருமலை மேல்கோட்டை போன்ற பல கோவில்களை வைனவ முறைப்படி புனரமைத்தார். அவர் மிகச்சிறந்த சமூக சீர்திருத்த வாதியாக திகழ்ந்தார். ஜாதிகளை கடந்து அனைவருக்கும் பூனூல் அனிவித்து ஸ்ரீ வைஷ்னவர்களாக மாற்றி, அவர்களுக்கு தமிழ் வேதம் என்று சொல்லப்படுகிற திவ்ய பிரபந்தத்தை சொல்லிக் கொடுத்தார். அவர் நம் நாடு முழுதும், 74 ஆச்சார்யர்களை (சிம்ஹாசன அதிபதிகளை) நிறுவி ஸ்ரீ வைஷ்னவத்தை வளரச் செய்தார்.
"அடியவனுக்கு அடியவன்" எனும் உயர்ந்த தத்துவத்தை கொண்ட ஸ்ரீ வைஷ்னவத்தை அருளி, இறைவனிடம் சரணாகதி அடைவதுதான் சாலச் சிறந்தது என்பதை அவர் வலியுறுத்தினார்.
சுயநலமில்லாத பரந்த நோக்க முடைய ஒரு சனாதன தர்மிக்கு சிறந்த எடுத்துக்காட்டு இராமானுஜன்.
Thanks; Enlightened Master
ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ... |
இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ... |
நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ... |
Leave a Reply
You must be logged in to post a comment.