சூரியநெல்லி சிறுமி பாலியல்பலாத்கார சர்ச்சையில் சிக்கியுள்ள மாநிலங்களவை துணைத்தலைவர் பிஜே. குரியன், இந்த பிரச்னை தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியிடம் நேற்று அவர் தந்த விளக்கம் நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் விரைவில் பதவி விலகிவிடுவார் என்று எதிர்பார்க்க படுகிறது .
கேரளாவில் உள்ள சூரிய நெல்லியை சேர்ந்த சிறுமியை , 15 ஆண்டுகளுக்கு முன்பு 45க்கும் மேற்பட்டவர்கள் பாலியல் பலாத்காரம் செய்தனர் . அந்த 45 பேரில் மத்திய அமைச்சராக இ ருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் பிஜே குரியனும் ஒருவர் என்றும் , அவர் தன்னை பலாத்காரம் செய்ததாகவும் பாதிக்கப்பட்ட சிறுமி குற்றம் சுமத்தினர் . இருப்பினும் குரியன் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கவேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து, இந்த விவகாரம் உயிர் பெற்றுள்ளது .
குரியன் தன்னை பலாத்காரம்செய்ததாக பாதிக்கப்பட்ட அந்தபெண் சில தினங்களுக்கு முன்பும் குற்றம் சாட்டினார். மேலும் சிறுமி கற்பழிப்புவழக்கில் தண்டனை பெற்று தலைமறைவாக இருக்கும் வக்கீல் தர்மராஜன் ஒரு மலையாள தொலைகாட்ட்சிக்கு அளித்த பேட்டியில், “சிறுமி கற்பழிப்புவழக்கில் குரியனுக்கும் தொடர்புண்டு. குமுளி விருந்தினர் மாளிகையில் இருந்த குரியனிடம் அந்த_சிறுமியை நான் அழைத்து சென்றேன்” என்ற பரபரப்பு தகவலையும் வெளியிட்டிருந்தார்.
இதனால், குரியனுக்கு சிக்கல் மேல் சிக்கல் அதிகரித்து வருகிறது இதனை தொடர்ந்து அவர் விரைவில் பதவி விலகி விடுவார் என்று நம்ப படுகிறது. அது சரி பதவி விலகவே இவ்வளவு போராட்டம் என்றால் தண்டனை?
ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ... |
இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ... |
நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.