சமிபத்தில் சி என் என் தொலைகாட்சியில் நரேந்திர மோடி அவர்களை சுகாசினி ஹைதர் செய்த நேர் கானல் நிகழ்ச்சியின் ஒரு பகுதி.
சுகாசினி : ஹிந்துத்வா கொள்கையில் பி ஜே பி உங்களோடு இப்போதும் இருக்கின்றனரா ?
மோடிஜி : ஹிந்துத்வாவை பற்றி உங்களுக்கு என்ன தெரியும் ?
சுகாசினி : சரி விடுங்கள் வேறு ஏதாவது பேசுவோம்
மோடிஜி : இல்லை இல்லை, எனக்கு ஒரு முறை சொல்லுங்கள் ஹிந்துத்வா என்றால் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று ?
சுகாசினி : நான் ஏன் கேட்டேனென்றால், பி ஜே பி இப்பொழுதும் இராமர் கோவிலை பற்றி கூறிக் கொண்டிருக்கிறது, அதனால்
மோடிஜி : இராமர் கோவில் என்பது ஒரு செயல்திட்டமா அல்லது அதுதான் ஹிந்துத்வா வா ? எனக்கு அதை குறித்து தெளிவு படுத்துங்கள் ?
சுகாசினி : நீங்களே சொல்லிவிடுங்கள் ஹிந்துத்வா என்றால் என்ன வென்று !!
மோடிஜி : ஹிந்துத்வா என்றால் என்னவென்று நான் சொல்கிறேன். ஹிந்துத்வம் சொல்கிறது "சர்வதர்ம சம்மான்" அதாவது அனைத்து தர்மங்களையும் சமமாக பாவியுங்கள் என்று. நீங்கள் சொல்லுங்கள் இந்த நாட்டில் யாருக்கேனும் இதில் முரன்பாடான கருத்து இருக்கிறதா என்று ?
ஹிந்துவம் சொல்கிறது "ஏகம்சத் விப்ராஹ, பஹுதா வதந்தி" அதாவது சத்தியம் ஒன்றுதான் ஆனால் பலவிதமாக சொல்லப்படுகிறது என்று. ஒவ்வொரு மணிதர்களும் தங்கள் வழிகளில் அதை சொல்கிறார்கள் அவ்வளவுதான். அவர்கள் கீதையை பின்பற்றலாம், குரானை பின்பற்றலாம், இராமாயனத்தையோ, மஹாபாரதத்தையோ பின்பற்றலாம்.
ஹிந்துத்வா சொல்கிறது "சர்வே பவந்து சுகினஹ", "சர்வே சந்து நிராமயா" , "சர்வே பத்ரானி பஷ்யந்து", "மா கஷ்சித் துகபாக் பவேத்" !! அதாவது எல்லோரும் நன்றாக இருக்கட்டும், எல்லோரும் ஆரோக்கியமாக இருக்கட்டும், எல்லோருக்கும் நல்ல கல்வியும் ஞானமும் கிடைக்கட்டும். இந்த கருத்தில் இந்த நாட்டில் இருப்போர் யாருக்கேனும் முரன்பாடு இருக்கிறதா ??
ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ... |
100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ... |
சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.