விவிஐபி சாப்பர் ஹெலிகாப்டர் பேரத்தை யார் இறுதி செய்தது?

 விவிஐபி சாப்பர் ஹெலிகாப்டர் பேரத்தை யார் இறுதி செய்தது? மூன்றாயிரத்து ஐநூறு கோடி ரூபாய் மதிப்புள்ள 12 ஏவிடபிள்யு101 ஹெலிகாப்டர்களை அரசு வாங்கிய விவகாரத்தில் வழங்கப்பட்ட லஞ்சங்கள் குறித்து நீதிமன்ற கண்காணிப்பில் காலவரையறைக்குட்பட்ட சிபிஐ விசாரணை ஒன்றை பாஜக கோருகிறது. நீதிமன்ற கண்காணிப்பு இல்லாமல் ஐக்கிய முற்போக்குக்

கூட்டணி ஆட்சியில் எந்த பலனும் கிடைக்காது. 2ஜி அலைக்கற்றை விவகாரம் போன்ற பெரும் ஊழல் வழக்குகளைப் பொறுத்தவரை பொதுமக்களிடமிருந்து எழுந்த அழுத்தத்தின் காரணமாகவே காங்கிரஸ் விசாரணைக்கு உத்தரவிட்டது. ஆனால் தொடர்ந்து விசாரணையை தாமதப்படுத்தியது. உச்சநீதிமன்றம் தானாகவே முன்வந்து 2 ஜி ஊழல் விசாரணையைக் கண்காணிக்கத் தொடங்கிய பின்தான் விசாரணையில் பலன்கள் கிடைக்கத் தொடங்கின. இல்லையெனில் ஒன்றுக்கும் பயனில்லாத விசாரணையாக 15 மாதங்கள் நீண்டிருக்கும்.

விவிஐபிக்களுக்கான ஹெலிகாப்டர் வாங்கிய விவகாரத்தில் சரியான விசாரணையை மத்திய அரசு தவிர்ப்பதாக பாஜக குற்றம்சாட்டி வருகிறது. இத்தாலிய மற்றும் இந்திய ஊடகங்களில் சென்ற ஆண்டின் இறுதியிலேயே இந்த விவகாரம் தொடர்பாக கொடுக்கப்பட்ட லஞ்சங்கள் பற்றிய தகவல்கள் வெளிவந்துவிட்டன. அந்த செய்திகள் வெளியானபின்னர் இத்தாலிய அரசு அந்த விவகாரத்தைத் தீவிரமாக எடுத்து விசாரிக்கத் தொடங்கிவிட்டது. ஆனால் இந்திய அரசோ எந்த விதத் தீவிர விசாரணையையும் மேற்கொள்வதில் ஈடுபாடே காட்டவில்லை. இத்தனைக்கும் அரசின் உள்மட்ட விசாரணைக் குழுவினர் இந்த பேரம் நியாயமாகவே நடந்தது என்று சான்றளிக்கத் தயாராக இருப்பதாக விவரங்கள் கூறுகின்றன. பாதுகாப்பு அமைச்சகத்தின் உள்மட்ட விசாரணை விவரங்களை பாஜக கோருகிறது. இந்த பேரத்தில் எந்த தவறுகளும் நடக்கவில்லை என்று அரசு எப்படி முடிவுக்கு வந்தது?

இந்த விசயத்தில் சுவாரசியமானது என்னவெனில், மாநிலங்களவையில் சென்ற ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி நான் கேட்ட கேள்விக்கு அரசு உள்மட்ட விசாரணையைப் பற்றி எந்தக் குறிப்பும் தரவில்லை. எந்தக் குறிப்பிட்ட தகவலும் இல்லாத நிலையில் அரசு இந்த விஷயம் தொடர்பாக எந்த விசாரணையையும் எந்த அமைப்பையும் கொண்டு செய்யவில்லை என்று பதில் கூறப்பட்டது. உண்மையிலேயே அரசு நினைத்தால் கிடைக்கும் தகவல்களிலிருந்து விசாரணையைத் தொடங்க முடியும். இத்தாலியில் இருந்து அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வர வேண்டிய அவசியம் இல்லை.

ஹஸ்கே மற்றும் அவரது சகாவான கெரோசா ஆகியவர்களுக்கு இடையே நடந்த உரையாடல் பதிவுகள் பொதுவெளியில் நான்கு மாதங்களாக உள்ளன. இந்திய அரசு அதைப் பற்றி எந்தக் கவலையும் படவில்லை.

சந்தேகத்துக்குரிய இந்த பேரத்தில் அரசு காண்பிக்கும் அலட்சிய அணுகுமுறையால் இந்த ஊழலுடன் தொடர்புடையவர்களில் ஒருவரான பின்மெக்கானியாவின் இந்தியத் தலைவர் இந்நாட்டிலிருந்து வெளியேறும் வாய்ப்பு உள்ளது.

பாதுகாப்பு அமைச்சகரகம் தனது தவறை ஒப்புக்கொள்ளாமல் பிரச்னையைத் திசைதிருப்ப தொழில்நுட்ப விவரங்களைச் சொல்லி தேவையில்லாமல் தேசிய ஜனநாயக கூட்டணியையும் இந்த விவகாரத்தில் இழுக்கிறது. தொழில்நுட்ப விவரங்கள் தொடர்பான பிரச்னை அல்ல இந்த பேரம். அந்த பேரத்தில் பரிமாறிக் கொள்ளப்பட்ட லஞ்சங்கள் தொடர்பானது. சரியான நேரத்தில் விசாரணை நடத்தாமல், இந்தியர்களில் யார் பயன்பெற்றார்கள் என்பதை கண்டுபிடிக்காமலும் அரசு தோல்வியுற்றுள்ளது.

காங்கிரஸ் அரசு கழுத்தளவு லஞ்சத்தில் புதைந்துவிட்டது. காமன்வெல், 2ஜி, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு, கடன் தள்ளுபடி என்று ஊழல்களே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முத்திரை ஆகிவிட்டது. தற்போது வெடித்துள்ள விவிஐபி சாப்பர் ஹெலிகாப்டர் பேர சர்ச்சை குறித்து அரசு பதில் சொல்ல வேண்டும்.

1.விவிஐபி சாப்பர் ஹெலிகாப்டர் பேரத்தை யார் இறுதி செய்தது? யார் கையெழுத்திட்டது?

2. யார் லஞ்சத்தொகைகளைப் பெற்றது?

3. இத்தாலிய குற்றப்பத்திரிக்கையில் இரண்டு இடங்களில் 'த பேமிலி' என்று குறிப்பிடப்பட்டு 28 மில்லியன் ஈரோக்கள் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது? யார் அந்தக் குடும்பம் என்பதை அறிய தேசம் விரும்புகிறது?

4.ஹஸ்கே மற்றும் எமார் எம்ஜிஎப் ஆகியவர்களுக்கு இடையிலான தொடர்பு  என்ன?

5. சாப்பர் ஹெலிகாப்டர் ஊழலில் ஐடிஎஸ் இன் பங்கு மற்றும் நிலை என்ன?
6. இந்த ஊழல் தொடர்பாக விசாரிக்க அரசு நீதி உதவி கோரிக்கை கடிதத்தை வெளியிட்டதா?

நன்றி ; திரு. ப்ரகாஷ் ஜாவேத்கர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...

உடல் எடை குறைய

தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ...