இன்று உலக மகளிர் தினமாம்..முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும், பத்திரிக்கை தொலைகாட்சிகளிலும்
வெறும் பெண்கள் முகம்,செய்திகள், இத்யாதி..இத்யாதி..
இன்று உலகெங்கிலும் உள்ள…வேண்டாம்…..இந்தியாவிலுள்ள—அதுவும் வேண்டாம்—தலை நகர் தில்லியிலுள்ள பெண்களின் நிலை பற்றி டைம்ஸ் ஆஃப் இந்தியாவிலுள்ள ஒரே ஒரு செய்தியை மட்டும் தருகிறேன்…
ஓ.ஆர்.ஜி யுடன் டைம்ஸ் நடத்திய ஒரு கருத்துக்கணிப்பு..இதோ.
பாது காப்பு இல்லை—47 சதம்
பாதுகாப்பே இல்லை—46 சதம்
2.எப்போது பாதுகாப்பு குறைவு என் நினைக்கிறீர்கள்?
இரவு 8 மணிக்கு பிறகு—47 சதம்
இரவு 10 மணிக்கு பிறகு –27 சதம்
3.தெருக்களில் “தவறாக ” நடந்து கொள்கிறார்களா?
ஆம்—62 சதம்
4.மற்ற நகரங்களில் பெண்களின் பாதுகாப்பற்ற நிலை எப்படி உள்ளது?
மும்பை—47 சதம்
பெங்களூரூ—35 சதம்
கொல்கொத்தா—33 சதம்
சென்னை—31 சதம்
பெண்களை தாயாக தெய்வமாக வணங்கும் பாரத நாட்டில் “பெண்களுக்கு பாதுகாப்பிலை” என்பது வெட்கி தலை குனிய வேண்டிய விஷயம்….அதைவிட வருத்த மான விஷயம்
பெண் தலைமையிலுள்ள ஐ.மூ.கூ..அரசில்..(சோனியா காந்தி)—பெண் முதல்வராக இருக்கும் (ஷீலா தீக்ஷித்) மாநிலத்தில் சூரியன் மறைந்தால் —பெண்கள்…நடமாடமுடியவில்லை என்பது கேலிக்கூத்து.
அதுமட்டுமல்ல..பெண்கள் முதல்வராக இருக்கும் கொல்கொத்தாவிலும்..( மம்தா பானர்ஜி)—சென்னையிலும் ( ஜெயலலிதா)..பெண்களுக்கு பாதுகாப்பில்லை..எனபது துயரத்திலும் துயரம்.
இதைவிட கொடுமை..இந்த புள்ளிவிவரங்களை தந்த இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் வேறு ஒரு பக்கத்தில் தில்லி மாநில போலீஸின் ஒரு விளம்பரம் வந்துள்ளது..அதன் வாசகம் வருமாறு..
” பெண் என்பதில் பெருமைப்படு”
இன்று மட்டுமல்ல—என்றுமே—எப்போதுமே”
“உங்களுக்கு 365 நாளும் மகளிர் தின வாழ்த்துக்கள்—இந்த வருடம் மட்டுமல்ல—ஒவ்வொரு வருடமும்…”
இது எப்படி இருக்கு…
ஒவ்வொரு முறையும் குண்டுவெடித்து நூற்றுக்கணக்கில் அப்பாவிகள் கொல்லப்பட்டவுடன் பிரதமர் மன்மோகன் சிங்
அறிக்கை வெளியிடுவார்..
” நாங்கள் வன்முறையை ஒருபோதும் ஏற்கமாட்டோம்…யார் தவறு செய்தாலும் சட்டம் பார்த்துக்கொண்டிருக்காது”
படித்து படித்து…கேட்டுக்கேட்டு புளித்துப்போன வார்த்தைகள்—வசனங்கள்..
அதுபோலத்தான் இதுவும் இருக்கிறதோ..
ஆம் அப்படித்தானே இருக்கும்
ஆட்சியாளர்கள் இருவரும் ஒருகட்சிதானே–
நன்றி ; எஸ்.ஆர். சேகர் எம்.ஏ.பி.எல் மாநிலப் பொருளாளர்–பாஜக
மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ... |
முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ... |
முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ... |
Leave a Reply
You must be logged in to post a comment.