நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில், முறைகேடு; சிபிஐ

 ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதலாவது ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில், முறைகேடு நடைபெற்றிருப்பதற்கான முகாந்திரம் இருப்பதாக, உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில், ஜே. செலமேஸ்வர், மதன் பி. லோகுர் ஆகியோரடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மூடி முத்திரையிட்ட உறையில், நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பான அறிக்கை, சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.

அதில்,”ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதலாவது ஆட்சியின் போது 2006-2009 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில், நிறுவனங்களின் பொறுப்புடைமையை சரிபார்க்காமலே நிலக்கரிச் சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றிருப்பதற்கு போதிய முகாந்திரங்கள் உள்ளன’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ஜி.இ. வாகன்வதி வாதிடுகையில்,”சிபிஐ-க்கு இவ்வழக்கில் இறுதித் தீர்ப்பு வழங்குவதற்கு அதிகாரம் இல்லை. சிபிஐ விசாரணையை முடக்க நான் முயற்சிக்கவில்லை. சிபிஐ விசாரணை செய்வதில் எனக்கு பிரச்னை இல்லை. சுரங்க ஒதுக்கீடு தொடர்பான விசாரணையை சிபிஐ தொடரட்டும் என்றார்.

அப்போது நீதிபதிகள் கூறுகையில், “அரசின் கருத்து சிபிஐயின் விசாரணையைப் பாதிக்கலாம் என்பதால், கருத்தை எச்சரிக்கை உணர்வுடன் கூற வேண்டும். அரசின் எந்த கருத்தும் விசாரணைக்கு குந்தகம் விளைவிப்பதாக இருக்கக் கூடாது. சூழ்ச்சியான கோணத்தில் விசாரணையை எதிர்கொண்டால், அது விசாரணையைப் பாதிக்கும்.சுரங்க ஒதுக்கீடுக்காக அதிக எண்ணிக்கையிலான நிறுவனங்கள் விண்ணப்பித்த நிலையில், சிறு நிறுவனங்களைத் தேர்வு செய்து விருப்ப அடிப்படையில் சுரங்கத்தை ஒதுக்கீடு செய்தது ஏன் என்று அரசு விளக்கமளிக்க வேண்டும்’ என்று தெரிவித்தனர்.மேலும், கடந்த 8ஆம் தேதி தாக்கல் செய்த நிலவர அறிக்கை தொடர்பாக பிரமாணப் பத்திரத்தை சிபிஐ இயக்குநர் தாக்கல் செய்ய வேண்டும். அவரால் தணிக்கை செய்யப்பட்ட, அரசியல் நிர்வாகிகளிடம் பகிர்ந்து கொள்ளப்படாத அதே நிலையை எதிர்காலத்திலும் தொடர வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த அறிக்கையால் மத்திய அரசுக்கும் சிபிஐக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...