1993 மும்பை கலவரமும் துரைமார்களின் அறிவுஜீவிப் புரிதலும்

 1993 மும்பை கலவரமும் துரைமார்களின் அறிவுஜீவிப் புரிதலும்நடிகர் சஞ்சய்தத் 1993 கலவரத்துக்கு ஆயுதம் கடத்தி உதவிய குற்றத்துக்காக தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சட்டபூர்வ அனுமதியின்றி ஆயுதம் வைத்திருந்த குற்றத்துக்கு மட்டும் தண்டிக்கப்பட்டுள்ளார். இதே போன்ற ஆயுதங்களை வைத்திருந்து

கேட்கும்போது எடுத்துக் கொடுத்த பலரும் தடா சட்டப்பிரிவுகளின் கீழ் தண்டிக்கப்பட்டுள்ளனர். ஆனால் சஞ்சய்தத் 5ஆண்டு சிறைத் தண்டனை மட்டும் பெற்றிருப்பதே பெரியவீட்டுப் பிள்ளைக்குக் காட்டப்பட்ட சலுகை என்பதை உறுதி செய்கிறது.

நரசிம்மராவ் அரசு இவர் சம்பந்தப்பட்ட வழக்கை நீர்த்துப் போகச் செய்தது.

1993ல் AK 56 ரக துப்பாக்கி ஒன்றும் சில கையெறி குண்டுகளும் வைத்திருந்தார் சஞ்சய் தத். அது தாவூத் இப்ராஹிம் கும்பலின் உதவிக்கு என்று விசாரணையில் . சுய பாதுகாப்புக்கு என்று விளக்கமளித்தார். சுயபாதுகாப்புக்கு கைத்துப்பாக்கி போதுமே? ஏன் இவ்வளவு பெரிய துப்பாக்கி என்ற கேள்விக்கு பதில் இல்லை. கையெறி குண்டுகள் வீசித்தப்பித்து ஓடும் அளவுக்கு எதிரிகள் இருந்தால் ஏன் காவல்துறையில் புகார் தரவில்லை? சுனில் தத் காங்கிரசில் செல்வாக்குப் பெற்ற மனிதர், பாதுகாப்பு ஏற்பாடுகள்
செய்து கொள்ளலாம்.

ஆனால் எல்லையில் ராணுவம் பயன்படுத்தும் ரகத்திலான துப்பாக்கியையும் கையெறி குண்டுகளையும் சுய பாதுகாப்புக்கு வாங்கி வைக்கவேண்டிய அவசியம் என்ன? இந்தக் கேள்விகளுக்கு பதில் இல்லை.

முன்னாள் நீதிபதி கட்ஜு தன் கடமையே கண்ணாக சஞ்சய் தத்தை மன்னித்துவிடவேண்டும் என்று பேசினார். அதற்காக மஹாராஷ்டிரா ஆளுநருக்குக் கடிதம் எழுதினார். இது நீதி பரிபாலனத்தில் செய்யப்படும் குறுக்கீடு என்ற குற்றச்சாட்டை கட்ஜு கண்டு கொள்ளவில்லை. 1993 மும்பை கலவரம் அவர் காட்டிய காரணங்கள் நகைப்புக்குரியவை. சஞ்சய் தத் காந்திய வழியை வலியுறுத்தி முன்னா பாய் எம்பிபிஎஸ் படத்தில் நடித்தார். அவரது தாய் தந்தையர் இந்திய பாகிஸ்தான் போர்க்காலங்களில் இராணுவத்துக்கு உதவி செய்தனர், சமூக சேவை செய்தனர். ஆகவே சஞ்சய் தத்தை மன்னித்து விட்டுவிட வேண்டும் என்று கட்ஜு கூறினார். பெரியவீட்டுப் பிள்ளை என்பதால் சஞ்சய் தத்தை மன்னித்து விடச் சொல்கிறீர்களே மற்ற ஏழைக் குற்றவாளிகள் கதி என்ன? சட்டம் வசதிக்காரர்களை ஒரு விதமாகவும் செல்வாக்குக் குறைந்தவர்களை ஒரு விதமாகவும் கையாளுமா என்ற கேள்வி எழுந்ததும் எல்லோரையும் மன்னியுங்கள் என்றார்.

கட்ஜு உளறுவாயர். பாகிஸ்தானுக்குச் சென்று என் தேசத்தில் நரேந்திர மோடி சரியில்லை என்று பேசுவார். காரணம் கேட்டால் முஸ்லிம்கள் கஷ்டப்படுகிறார்கள் என்பார். நேரு குடும்பத்துக்கு மிக நெருக்கமான மக்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்ற சுதந்திர இந்திய நியதிப்படி இதை விட்டுவிடுவோம்.

தற்போது வேறொரு லண்டன் துரை கிளம்பியிருக்கிறார். மேகநாத் தேசாய் என்று பெயர் கொண்ட பிரபு இவர். இங்கிலாந்து பிரபுக்கள் சபையின் ஆயுட்கால உறுப்பினர். குஜராத்தில் பிறந்தவர். அமெரிக்காவில் படித்து இங்கிலாந்தில் குடியேறியவர். கடவுள் நம்பிக்கை அற்றவர். சமீபத்தில் வீழ்த்தப்பட்ட லிபியாவின் அதிபர் கதாஃபியின் மகன்

லண்டன் பொருளாதாரக் கல்விக்கூடத்தில் (London School of Economics) முனைவர் பட்டம் பெற்றதற்கு வரம்புக்கு மீறிய உதவிகள் செய்யப்பட்டன என்ற குற்றச்சாட்டில் சிக்கி, அதை மறுத்து, பிறகு குற்றச்சாட்டுகளில் இருந்து ஒரு வழியாக தப்பி வந்தவர். இவர் இடதுசாரிச் சிந்தனாவாதி என்பதும் மார்க்சியம் குறித்துப் பல புத்தகங்கள் எழுதியவர் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய தகவல்கள். தற்போதைய பொருளாதார உலகமயமாக்கல் மீண்டும் சோஷலிஸத்தைக் கொண்டுவரும் என்று ஆரூடம் கூறியுள்ளார்
தேசாய் பிரபு.

இவர் அடிக்கடி இந்தியா வருபவர். நிறைய இடங்களில் கருத்துப் பேசுவார். 1993ல் கலவரம் நடந்த போது வந்திருந்தாராம். இவர் பேசும் ஓட்டலுக்கு போலீஸ் பாதுகாப்புடன் கலவரம் நடந்த பகுதிகள் வழியே அழைத்துச் சென்றனராம். கலவரக் காட்சிகள் தம்மை மிகவும் பாதித்ததாகவும் கூறியுள்ளார்.

அந்தக் கலவரம் குறித்த நீதிபதி ஸ்ரீ க்ருஷ்ணா கமிஷன் விசாரித்து அளித்த அறிக்கையில் சிவசேனையைச் சில இடங்களில் கண்டித்துப் பேசியிருந்தது. அதைக் குறிப்பிடும் தேசாய் பிரபு மும்பைக் கலவரம் ஹிந்துக்கள் முஸ்லிம்கள் மீது நடத்திய திட்டமிட்ட கொலைவெறித் தாக்குதல் என்றும் அதில் சிவசேனை, பாஜக, காங்கிரசு ஆகிய கட்சிகளுக்குப் பங்குண்டு என்றும் கூறுகிறார். டிசம்பர் 1992 முதல் ஜனவரி 1993 வரையிலான தாக்குதல்கள் முஸ்லிம்களைக் குறிவைத்து நிகழ்த்தப்பட்டன என்று இவர் கூறுகிறார்.

சஞ்சய்தத்துக்குத் தான் இந்துவா முஸ்லிமா என்பதே தெரியாது என்றும், தன்னையும் தன் குடும்பத்தையும் பாதுகாக்காக அவர் துப்பாக்கி வைத்துக் கொண்டார் என்றும், அவர் செய்தது சட்டப்படி குற்றம் என்றாலும் குற்றம் சாட்டப்பட்டுள்ள பலர் பாராளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் உறுப்பினர்களாக இருந்து சட்டங்களை இயற்றும் போது இந்தக் குற்றம் மன்னிக்கப்படலாம் என்றும் ஆனால் இந்தியாவில் அரசியல்வாதியாக இருப்பது ஒன்றே தண்டனையில் இருந்து ஒருவரைக் காப்பாற்றும் என்றும் இந்த லார்டு துரை கூறியிருக்கிறார். சீனத்து மாவோ, ருஷ்ய ஸ்டாலின் போன்றோரைப் பற்றியும் இந்த சோஷலிஸ்ட் துரை இதே கருத்தைக் கொண்டிருப்பாரா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி.

ஆனால் இவர் கூறும் ஸ்ரீ க்ருஷ்ணா குழு அறிக்கையின்படி கலவரத்தில் இறந்தவர்களில் காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் இறந்தோர் 356 பேர், கத்திக்குத்து பட்டு இறந்தவர்கள் 347 பேர், கலவரத்தில் சிக்கி மாண்டவர்கள் 91 பேர், கும்பல்களின் தாக்குதலில் இறந்தோர் 80 பேர், தனிநபர் சண்டைகளில் இறந்தோர் 22 பேர், 4 பேர் இறந்தது வேறு காரணங்களால். நீதிபதி ஸ்ரீ க்ருஷ்ணா தேவி உபாசகர் என்பதால் அவர் கலவரத்தை விசாரிக்கக்கூடாது என்று இடது சாரிகள் கூறினர். சிவசேனை ஆட்சிக்கு வந்ததும் விசாரணைக் கமிஷனை கலைத்தது. 3 மாதங்கள் கழித்து மீண்டும் அமைத்தது. ஆனால் கலவரங்களோடு மும்பை குண்டு வெடிப்புகளையும் சேர்த்து விசாரிக்கவேண்டும் என்று மஹாராஷ்டிர அரசு ஆணையிட்டது. இது இஸ்லாமியருக்கு எதிரான செயல் என்று கண்டனங்கள் எழுந்தன.

1992 டிசம்பர் 6ஆம் தேதி சர்ச்சைக்குரிய கட்டிடம் அயோத்தியில் இடிக்கப்பட்டதும் முஸ்லிம்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், பொது சொத்துக்கள் தாக்கப்பட்டன. ஒரு முஸ்லிம் கான்ஸ்டபிள் அரசு வேலை செய்கிறார் என்பதால் முஸ்லிம் கலவரக்காரர்களால் கொல்லப்பட்டார். இரண்டு கால்களும் செயலிழந்த ஒரு பெண் உட்பட ஆறு ஹிந்துக்கள் உயிருடன் கொளுத்தப்பட்டனர்.

இதற்கு பதிலடி தரும் விதமாக இந்துக்கள் வாழும் பகுதிகளிலும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளில் உள்ள இந்துக்களுக்கும் பாதுகாப்பளிக்க சிவசேனை களமிறங்கியது. ஒரு கட்டத்தில் கலவரம் அத்துமீறுகிறது என்ற நிலையில் பால் தாக்கரே சிவசைனிக்குகள் வன்முறையில் ஈடுபடக்கூடாது என்று உத்தரவிட்டார். ஆனால் அதற்குப் பிறகும் இந்துக்கள் தாக்கப்படுவது சில நாட்களுக்குத் தொடர்ந்தது. இந்தக் கலவரத்தில் சிவசேனையின் உதவியுடன் ஹிந்துக்களும் மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் உதவியுடன் முஸ்லிம்களும் மோதினர். தாவூத் முஸ்லிம் கலவரக்காரர்களுக்கு பல நவீன ஆயுதங்களை வழங்கினான். அதில் ஒரு பகுதியை நடிகர் சஞ்சய் தத்
வைத்திருந்து கேட்ட போது கொடுத்தார்.

சற்றே விரிவாக வரலாற்றைப் பார்ப்போம்.

6 டிசம்பர் 1992:

அன்று மதியம் பாபர் மசூதி என்று பரவலாகக் குறிப்பிடப்படும் சர்ச்சைக்குரிய கட்டிடம் இடிக்கப்பட்டது. இரவு 11:45 மணிக்கு மும்பையில் நிர்மல் நகர் பகுதியில் ஒரு

விநாயகர் கோவில் இடிக்கப்பட்டு விக்கிரகம் சேதப்படுத்தப்பட்டது.

7 டிசம்பர் 1992:

முஸ்லிம்கள் கூடிப்பேசி தெருக்களில் கூட்டம் கூட்டமாக அலைந்தனர். அரசாங்கச் சொத்துக்கள் நாசம் செய்யப்பட்டன. காவல்துறையினர் தாக்கப்பட்டனர். மும்பை நகரப்

பேருந்துகள் முஸ்லிம் கும்பல்களால் கொளுத்தப்பட்டன. இரண்டு காவலர்கள் ஒரு தலைமைக்காவலர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இதைச் செய்தது 500

பேர் கொண்ட ஒரு முஸ்லிம் கூட்டம் என்பது தாக்கப்பட்ட காவலர்களின் வாக்குமூலம். மேலும் ஒரு 600 பேர் கொண்ட முஸ்லிம் கூட்டம் பொதுச்சொத்துக்களை அடித்து

உடைத்தபடி வலம் வந்ததாக மௌலானா சௌகத் சாலை காவல் நிலையத்தில் தாக்கப்பட்ட காவலர் மல்ஹாரி அஹிரே தரும் தகவல்.

8 டிசம்பர் 1992:

கலவரம் 33 காவல் சரகங்களுக்குப் பரவியது. ஊரடங்கு உத்தரவு இருந்தும் கலவரக்காரர்கள் அடங்கவில்லை என்பதால் காவல்துறை 71 இடங்களில் நடத்திய துப்பாக்கிச்

சூட்டில் 21 ஹிந்துக்கள் 72 முஸ்லிம்கள் பிற மதத்தினர் மூன்று பேர் இறந்தனர், 131 முஸ்லிம்கள் காயமடைந்தனர்.

9 டிசம்பர் 1992:

கலவரம் சற்றே கட்டுக்குள் வரத்துவங்கியது. 28 இடங்களில் கலவரம் செய்தோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது போலீஸ். 5 இந்துக்கள், 12 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

13 இந்துக்கள், 12 முஸ்லிம்கள் மற்றும் 6 பேர் பிறமதத்தவர் காயமடைந்தனர். கட்கோபார் பகுதியில் இரண்டு கோவில்கள் இடிக்கப்பட்டன. ட்ராம்பே பகுதியில் ஒரு மசூதி

தாக்கப்பட்டது. ஒரு முஸ்லிம் இடுகாடு தாக்கப்பட்டது.

10 டிசம்பர் 1992:

நிலைமை கட்டுக்குள் இருந்தது. இரு இடங்களில் காவல்துறை துப்பாகிச்சூடு நடத்தியது. ஆனால் யாருக்கும் உயிரிழப்பு ஏற்படவில்லை. மஹிம் பகுதியில் கலவரக்காரர்க்ளை

நோக்கிப் போலீசார் சுட்டதில் இரண்டு முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

11 டிசம்பர் 1992:

ஆசாத் மைதான் பகுதியில் ஒரு முஸ்லிம் தனிநபர் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு ஹிந்து கொல்லப்பட்டார், 4 ஹிந்துக்கள் காயமடைந்தனர். 23 காவல்துறை சரகங்களில்

பல்வேறு விதங்களில் பொது அமைதி பாதிக்கப்பட்டது.

12 டிசம்பர் 1992:

கட்கோபார், பாண்டுப், திந்தோஷி ஆகிய மூன்று இடங்களில் கலவரம் நடந்தது. ஒரு ஹிந்துவும் ஒரு முஸ்லிமும் காயப்பட்டனர். கலவர கும்பல் தாக்கியதில் ஒரு ஹிந்து

உயிரிழந்தார். 7 கத்திக்குத்து சம்பவங்களில் 7 ஹிந்துக்கள் இரண்டு முஸ்லிம்கள் இறந்தனர். இரண்டு ஹிந்துக்கள் ஒரு முஸ்லிம் காயமடைந்தனர்.

இன்றைய தினத்தில் காவல்துறை நிலைமை கட்டுக்குள் வந்ததாக அறிவித்தது. ஆனால் ஊடகங்கள் காவல்துறை முஸ்லிம்களின் மீது அநியாத்துக்குத் துப்பாக்கிச் சூடு

நடத்தியதாகக் குற்றம் சுமத்தியது. முன்னாள் அந்நாள் அமைச்சர்கள் அரசியல்வாதிகள் இக்கருத்தை வழிமொழிந்தனர். கலவரக்காரர்களில் முஸ்லிம்களே அதிகமிருந்தனர்

ஆகவே நடவடிக்கைகளில் அவர்களே அதிகம் பாதிக்கப்பட்டனர் என்று விளக்கமளித்தார் அப்போதைய மும்பை போலீஸ் கமிஷனர். இதனால் முஸ்லிம்கள் திட்டமிட்டுக்

காவல்துறையினராலும் ஹிந்துக்களாலும் தாக்கப்பட்டனர் என்ற கோணத்தை ஸ்ரீ க்ருஷ்ணா கமிஷன் ஏற்க மறுத்தது.

21 டிசம்பர் 1992 முதல் 20 ஜனவரி 1993:

  • பெர்ஹம்பாடா பகுதியில் ஒரு கழிவுநீர்த் தொட்டியில் இருந்து ஒரு ஹிந்துவின் சடலமும் ஒரு முஸ்லிம் காவலரின் சடலமும் மீட்கப்பட்டன. பல கத்திக்குத்துக்கள் அந்த உடல்களில் இருந்தன. ஹிந்துக்களைத் தாக்க வந்த முஸ்லிம் கலவர கும்பல் காவலரையும் குத்திக் கொன்றது விசாரணையில் தெரியவந்தது.
  • டோங்கிரி பகுதியில் குடித்துவிட்டு வந்த முஸ்லிம் ஒருவரால் ஹிந்து கூலித் தொழிலாளி ஒருவர் கொல்லப்பட்டார்.
  • மசூதிகளில் தொழுகை நேரங்களில் மதரீதியாக உணர்வுப்பூர்வமான பேச்சுகள் மூலம் கோபக்கனல் அணைந்து விடாதவாறு பார்த்துக் கொள்ளப்பட்டது. தெருக்களில் தொழுகைகள் நடத்தப்பட்டன.
  • ஹிந்துக்களை எதிர்த்துப் போரிட்டு பாபர் மசூதியை அவர்களது ரத்தத்தால் கட்ட வேண்டும் என்ற வாசங்கள் உருது மொழியில் அச்சிடப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் தொழுகை நேரத்தில் விநியோகிக்கப்பட்டது.
  • இரத்தத்தால் மசூதி கட்டும் ஃபத்வாவுக்கு பதிலளிக்கும் விதமாக ஹிந்துக்களால் மஹா ஆர்த்திகள் (தீப ஆராதனைகள், பூஜைகள்) ஏற்பாடு செய்யப்பட்டன. இவை பிப்ரவரி முதல் வாரம் வரை தொடர்ந்து நடை பெற்றன.
  • சிவசேனையின் அதிகாரப்பூர்வ நாளிதழ் சாம்னா "ஹிந்துக்கள் வீறு கொள்ள வேண்டும்" என்று எழுதியது.
  • தார்தேவ் பகுதியில் முஸ்லிம்களின் வீடுகள் கடைகள் சூறையாடப்பட்டன. முஸ்லிம்கள் ஹிந்துக்களால் தாக்கப்பட்டனர்.
  • திரு. கஜானன் கீர்திகர், திரு. ரமேஷ் மோரே ஆகியோர் தலைமையில் சிவசேனையினர் ஊர்வலமாகச் சென்று ஜோகேஸ்வரி காவல் நிலையத்தில் ஹிந்துக்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று மனு கொடுத்தனர். ஊர்வலத்தில் சிலரால் சாசா நகர் மசூதியும், மக்தும் நகர் குடிசைகளும் தாக்கப்பட்டன.
  • விஜய் போக்குவரத்துக் கம்பெனியில் வேலை பார்க்கும் ஹிந்து கூலித் தொழிலாளி ஒருவர் இரவில் இயற்கை உபாதைக்காக வெளியே சென்ற போது முஸ்லிம் கலவர கும்பலால் குத்திக் கொலை செய்யப்பட்டார். கூலித்தொழிலாளிகள் யூனியன் கடையடைப்புக் கோரியது. தொழிற்சங்க கூட்டங்களில் அரசின் கையாலாகாத்தனத்தை கடுமையாக விமர்சித்தனர் தொழிற்சங்கத் தலைவர்கள். கூலித்தொழிலாளியைக் கொன்றது முஸ்லிம் கலவரக்காரர்கள் என்ற விவரம் காட்டுத்தீ போலப் பரவி பரபரப்பு அதிகரித்தது. ஜனவரி 5/6 தேதிகளில் பெரும் கடையடைப்பு நடைபெற்றது.
  • டோங்கிரி, பைதோனி, V P சாலை, நாக்பாடா ஆகிய பகுதிகளில் கலவரங்கள் கத்திக்குத்துகள் நடந்தன. உயிரிழப்பு, காயம் என்று பாதிக்கப்பட்டவர்கள் நடைபாதைகளில் படுத்துறங்கி பகலில் கூலி வேலை செய்யும் அன்றாடங்காய்ச்சி ஹிந்துக்கள்.
  • டோங்கிரி, பைதோனி, V P சாலை, நாக்பாடா, தார்தேவ், மஹிம், தாராவி, நிர்மல் நகர், செம்பூர், கேர்வாடி மற்றும் அந்தேரி காவல் சரகங்களில் கத்திக்குத்துகளும் தீவைப்புகளும் நடந்தன. ஆள் நடமாட்டம் குறைந்த தெருக்களில் கத்திக்குத்துகள் நடந்தன. ஒரு ஹிந்து ஒரு முஸ்லிம் மற்றும் பிறமதத்தினர் இருவர் கொல்லப்பட்டனர்.
  • 13 ஹிந்துக்கள், ஒரு முஸ்லிம், பிற மதத்தினர் இருவர் படுகாயமடைந்தனர். காவல்துறையினர் முஸ்லிம்களால் தாக்கப்பட்டதை அடுத்து முஸ்லிம் பகுதிகளில் நடந்த கலவரத்தில் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவலர் ஒருவர் சிவசேனையினருடன் சேர்ந்து தாக்குதலில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டது.
  • மும்பை நகரின் பல பகுதிகளில் கலவரம் பரவியது. டோங்கிரி, பைதோனி, V P சாலை, நாக்பாடா, தார்தேவ், மஹிம், தாராவி, நிர்மல் நகர், செம்பூர், கேர்வாடி, அந்தேரி, நேருநகர், குர்லா, தேவ்நார், ட்ராம்பே, வகோலா, ஜோகேஸ்வரி ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. 16 ஹிந்துக்கள், 4 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். 41 ஹிந்துக்கள், 12 முஸ்லிம்கள் காயமடைந்தனர். வேறொரு கலவரத்தில் 13 ஹிந்துக்கள், ஒரு முஸ்லிம், பிற மதத்தவர் ஒருவர் கொல்லப்பட்டனர். கலவர கும்பலால் 7 ஹிந்துக்கள் ஒரு முஸ்லிம் ஆகியோர் கொல்லப்பட்டனர், ஒன்பது ஹிந்துக்கள், எட்டு முஸ்லிம்கள் காயமடைந்தனர்.
  • ராதா பாய் சாவல் என்ற பகுதியில் அதிகாலை 3.30 மணிக்கு பல ஹிந்துக்களின் வீடுகள் வெளியில் இருந்து பூட்டப்பட்டு தீ வைக்கப்பட்டன. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் எரித்துக் கொல்லப்பட்டனர். தொடர்ந்த கலவரத்தில் 22 ஹிந்துக்கள் 32 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். 9 ஹிந்துக்கள் 18 முஸ்லிம்கள் காயமடைந்தனர்.
  • காவலதுறையினர் நடத்திய சோதனைகளில் முஸ்லிம்கள் வீடுகளில் இருந்து துப்பாக்கிகள், ஜெலட்டின் குச்சிகள், வெடிகுண்டுகள் ஆகியன கைப்பற்றப்பட்டன. ஹிந்துக்களின் பகுதிகளில் இருந்து அரிவாள், கத்தி, உடைந்த ட்யூப் லைட்கள், பெட்ரோல் குண்டுகள் ஆகியன கைப்பற்றப்பட்டன.
  • சுலைமான் பேக்கரி என்ற கடைக்குள் ஒரு கும்பல் ஒளிந்து கொண்டு காவல்துறையினர் மீது துப்பாக்கியால் சுட்டது, காவலர்கள் திருப்பிச் சுட்ட போதும் உள்ளிருந்த கலவரக்காரர்கள் பயன்படுத்திய நவீனரகத் துப்பாக்கிகளுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. சிறப்புப்படை வரவழைக்கப்பட்டது. உள்ளிருந்த கும்பல் அமிலம் நிறைந்த பல்புகள், அமிலம் அடைத்த சோடா பாட்டில்களை வீசியது. சிறப்புப்படை அதிரடியாக உள்ளே நுழைந்த போது 15 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களால் தாக்கியது. காவலர்கள் பலமுனைகளில் இருந்து தாக்கியதில் மொத்தம் 78 பேர் அந்தக் கட்டிடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு பிடிக்கப்பட்டனர்.
  • மேலும் பல இடங்களில் பல கலவரங்கள் தொடர்ந்து நடந்தன. கலவரத்தில் 900 பேர் இறந்தனர். போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 356 பேர், கத்திக்குத்துப்பட்டு 347 பேர், கலவரத்தில் 81 பேர், தனி நபர் தாக்குதலில் 22 பேர், பிற காரணங்களில் 4 பேர் இறந்தனர்.

ஸ்ரீ க்ருஷ்ணா கமிஷன் சிவசேனை சற்றே அடக்கி வாசித்திருந்தால் உயிரிழப்புகள் குறைந்திருக்கும் என்று கருத்துச் சொன்னது. ஆனால் ஹிந்துக்கள் மீதான தாக்குதலுக்கு சிவசேனை ஆற்றிய எதிர்வினை என்பது பேசப்படவில்லை. எதிர்வினை ஆற்றாமல் பொறுமை காத்திருந்தால் உயிரிழப்புகள் குறைந்திருக்கும் என்பது நீதிபதியின் கருத்து. ஆனால் இது முஸ்லிம்களின் மீதான ஹிந்துக்களின் திட்டமிட்ட கொலைவெறித் தாக்குதல் என்ற வாதத்தை விசாரணைக் கமிஷன் மறுத்துவிட்டது.

ஆனால் சோஷலிஸ்டான தேசாய் பிரபு இது முஸ்லிம்கள் மீதான ஹிந்துக்களின் திட்டமிட்ட தாக்குதல் என்கிறார். முஸ்லிம்கள் கொல்லப்பட்ட போது காங்கிரஸ் அரசு கைகட்டி வேடிக்கை பார்த்தது என்கிறார். சிவசேனை, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து முஸ்லிம்களைத் திட்டமிட்டுத் தாக்கின என்கிறார். சஞ்சய் தத் மன்னிக்கப்பட வேண்டும் என்று இவரும் சொல்கிறார். இவர் சொல்லும் காரணங்கள் கட்ஜு புத்திசாலியோ என்று எண்ண வைக்கின்றன.

சஞ்சய் தத்தின் பாட்டி ஒரு ப்ராமண விதவை, அவர் வீட்டை விட்டு ஓடி வந்து முஸ்லிம் பாட்டுக் குழுவில் சேர்ந்து ஜத்தன் பாய் என்ற பெயரில் முஸ்லிமாக மாறிக் கொண்டார். ஒரு ஹிந்துவை மறுமணம் செய்து அவரையும் முஸ்லிமாக மாற்றினார். அவரது மகள் நர்கீஸ். அவர் ஹிந்தி சினிமாக்களில் நடித்து புகழ் பெற்ற நடிகை ஆனார். நர்கீஸுக்கு ஃபாத்திமா மற்றும் தேஜஸ்வரி என்று இரண்டு பெயர்கள் உண்டு. இந்த நர்கீஸ் பல்ராஜ் தத் என்ற சுனில் தத்தை ஆரிய சமாஜ முறைப்படி மணந்து கொண்டார். சுனில் தத் மோஹ்யால் ப்ராமணர். மோஹ்யால் ப்ராமணர்கள் இஸ்லாமிய வரலாற்றின் கர்பலா போரில் ஹுசைனுக்கு ஆதரவாகப் போர் புரிந்தவர்கள். திருமணத்தில் தன் பெயரைத் தேஜஸ்வரி என்றே சொன்னார். இவர் தன் 50ஆவது வயதில் இறந்த போது ஹிந்து மற்றும் முஸ்லிம் மதத்தினர் தங்கள் முறைப்படியே இறுதிச் சடங்குகள் செய்யவேண்டுமென்று வாதிட்டனர். கடைசியில் இரு மதத்தினரும் சமமாகத் தத்தமது முறைப்படி சடங்குகளைச் செய்தனர்.

ஆகவே சஞ்சய் தத் தான் முஸ்லிமா ஹிந்துவா என்று தெரியாத காரணத்தால் மன்னிக்கப்படவேண்டும் என்கிறார் தேசாய் பிரபு. 1993 கலவரங்களில் மும்பை இரண்டுபட்டிருந்த போது சஞ்சய் தத் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்று களமிறங்கினார். இது கலவரக்காரர்களை கோபப்படுத்தியது. அவர்கள் சஞ்சய் தத்தை மிரட்டினர். ஆகவே தன் பாதுகாப்புக்காக முன்னெச்சரிக்கையாகத் துப்பாக்கி வாங்கி வைத்தார். உரிமம் பெறாது வாங்கியது குற்றம். மற்றபடி ஏதுமில்லை என்கிறார் தேசாய் பிரபு. உண்மைகளைத் திரித்து குற்றமெல்லாம் ஏதுமில்லை என்று பேசுவது என்ன பிரபுத்துவமோ புரியவில்லை.

சுனில் தத் தன் மகனைக் காப்பாற்ற முனைந்தார், ஆனால் முடியவில்லை. அவர் காங்கிரஸ் எம்பி என்ற போதும் அப்போதைய காங்கிரஸ் முதல்வர் அவருக்குப் பரிவு காட்டவில்லை. ஆகவே சஞ்சு (ஆமாம். அப்படித்தான் சொல்கிறார் லார்டு தேசாய்) 18 மாதம் சிறை சென்றார். இப்போது மீதமுள்ள சிறைத் தண்டனையை அனுபவிக்க இறுதி உத்தரவு வந்துள்ளது. சட்டத்தை மீறினால் தண்டனை என்பது உண்டு. ஆனால் சட்டம் இயற்றுவோரில் பலர் குற்றப் பின்னணி கொண்டவர்கள். ஆனால் அவர்கள் யாரும் தண்டிக்கப்படவில்லை. சஞ்சய் தண்டிக்கப்பட்டார். ஆகவே அவர் சட்டத்தின்படி வாழும் குடிமகன் என்கிறார் தேசாய் பிரபு.

  • இந்துவா முஸ்லிமா தெரியாது.
  • தந்தை காங்கிரஸ் எம்பி என்ற போதும் காங்கிரஸ் முதல்வர் பரிவு காட்டவில்லை.
  • எம் எல் ஏக்கள் எம்பிக்களில் பலர் குற்றவாளிகள்.
  • நடந்தது முஸ்லிம்கள் மீதான ஹிந்துக்களின் திட்டமிட்ட தாக்குதல்.

இதெல்லாம் ஒருவரை மன்னிக்க தேசாய் பிரபு சொல்லும் காரணங்கள். இவரது சிந்தனைகளைக் கண்டு சிரிப்பதா அழுவதா என்று யோசிக்கும் போது இடதுசாரி சோஷலிச சிந்தனைகள் இப்படித்தான் முடத்தனமாக இருக்கும் என்ற உண்மை உரைப்பதால் இதைத் தாண்டிச் செல்வதே புத்திசாலித்தனம் என்று படுகிறது. ஆனால் பெரிய மனிதராக வலம வரும் ஒருவர் உண்மைகளைத் திரித்தும் பொய்கள் பல பேசியும் அறிவு ஜீவித்தனம் காட்டுவதை எதிர்த்து உண்மைகளைப் பதிவு செய்யாவிட்டால் பொய் மீண்டும் மீண்டும் பேசப்பட்டு உண்மை என்ற நிலைக்கு உயர்த்தப்பட வாய்ப்புகள் அதிகம் என்பதாலேயே தேசாய் பிரபுவின் முட்டாள்தனத்தை எதிர்த்து இங்கே கருத்துக்களைப் பதிவு செய்கிறேன்.

வந்தே மாதரம்.

மீனாட்சி சுந்தர பாண்டியன்,

இராசபாளையம்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நீதித்துறையின் பணியை, எதிர்க்க ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன 'நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன' என மக்களவை ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவ ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவில்லை எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இருஅவைகளும் நேற்று ஒத்திவைக்கப் பட்டன. ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல் நாடகத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு – அண்ணாமலை அரசியலில் தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதார ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதாரத்துடன் இணைக்க மோடி அழைப்பு கூட்டுறவு இயக்கத்தை, சுழற்சி பொருளாதாரத்துடன் இணைப்பதன் அவசியத்தை பிரதமர் ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று மோடி உரை இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று (நவ. 26), ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வ ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வழிகாட்டிய ஆர்.எஸ்.எஸ் சனிக்கிழமை (23-11-2024) அன்று வெளியான மகாராஷ்டிர சட்டப் பேரவைத் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...