முக்தியே நமது முக்கிய லட்சியம். நம்மை நாம் தனிப் பரம்பொருள் என்று உணரும்வரை நாம் அதனைப் பெற முடியாது. இந்த அனுபூதியை அடையப் பல நெறிகள் உள்ளன. இந்த நெறிகள் பொதுவாக 'யோகம்' (யோகம்= சேர்த்தல்: நம்மை நமது உண்மை நிலையில் சேர்த்தல்) என்று அழைக்கபடுகின்றன. இவை பலவாகப் பிரிக்கபட்டிருந்தாலும், குறிப்பாக
நான்கு நெறிகளாக இவற்றை வகுக்கலாம். இவை ஒவ்வொன்றும் நம்மை அந்தத் தனிப் பரம்பொருளின் அநுபூதி நிலைக்கு மறைமுகமாக அழைத்துச் செல்லும் வழிகள் மட்டுமே, எனவே மனிதர்களின் பல்வேறு இயல்புகளுக்கு ஏற்றவாறு அமைந்துள்ளன.
இங்கு ஒன்றை நினைவில்கொள்வது அவசியம்; சாதாரண மனிதன், தனது முயற்சியால் உண்மை மனிதனாகிய பரம்பொருள் ஆகிறான் என்பது இல்லை. அது எப்போதும் சுதந்திரமாக, பரி பூரணமாக உள்ளது. ஆனால் அதன் இயல்பைத் தற்காலிகமாக மறைத்துள்ள அஞ்ஞானம் நீக்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு நெறியைக் குறிக்கிறது. யோக நெறிகள் ஒவ்வொன்றின் முழு நோக்கமும் இந்த அஞ்ஞானத்தை நீக்கி, ஆன்மா தனது சொந்த இயல்பை மீண்டும் பெறச் செய்வதே. இதற்கு பயிற்சியும் வைராக்கியமும் முக்கியத் துணைகள். வைராக்கியம் என்பது வாழ்க்கையில் பற்றற்ற தன்மை. வாழ்க்கையில் நாம் வைத்திருக்கும் பற்றே, இன்ப நுகர்ச்சியில் நாம் கொள்ளும் விருப்பமே பந்தத் தொடரின் காரணம். பயிற்சி என்பது எதாவது ஒரு யோகத்தை இடைவிடாமல் பழகுவதே…
கர்மயோகம்: தனது கடமைகளைச் செய்வதாலும் அதற்குரிய செயல்களை ஆற்றுவதாலும் இறை உணர்வைப் பெறுவது.
பக்தியோகம்: தனது அந்தரங்கமான பக்தி உணர்வால், இறைவனை நினைத்து அவரைத் தனக்கே உரியவராக அடைய முற்படுவது.
ராஜயோகம்: மனத்தைக் கட்டுப்படுத்தி, உணர்ச்சிகளை ஒருமுகப்படுத்தி இறைவன்பால் தனது சிந்தனையை வழிப்படுத்தி, இறை உணர்வைப் பெறுவது.
ஞானயோகம்: தனது அறிவாற்றலால் பல்வேறு சாஸ்திர நூல்களைப் படித்தும் ஞானபோதனைகளைப் பெற்றும், இறைவனை உணர்ந்து அவரை அடைய முற்படுவது.
—சுவாமி விவேகானந்தர்
செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ... |
பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ... |
கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.