மத்திய அரசு பலவீனமாக உள்ளது என்பதற்கு சரப்ஜித்சிங் விவகாரமே நிரூபணம். இந்த அரசு தன்னை காப்பாற்றி கொள்வதிலே யே கவனமாக இருக்கிறது, நாட்டை பற்றி கவலை படுவதாக தெரியவில்லை என்று குஜராத் முதல்வர் நரேந்திரமோடி குற்றம் சுமத்தியுள்ளார்.
காந்திநகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் கூறியதாவது.
பாகிஸ்தான் சிறையில் சரப்ஜித்சிங் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதை பொறுத்தவரை, இதை தனிப்பட்ட நிகழ்வாகப் பார்க்கக்கூடாது. இத்தாலி கடற்படை வீரர்களின் விஷயத்தில் நடந்துவரும் சட்டப் போராட்டம், இந்திய வீரர்களின் தலை துண்டிக்கப்பட்டது, எல்லையில் சீனாவின் ஊடுருவல் , சரப்ஜித்சிங் விவகாரம் உள்ளிட்ட அனைத்து சம்பவங்களுமே இந்தஅரசின் தோல்வி மற்றும் பலவீனத்துக்கு ஆதாரங்களாகும்.
இது போன்ற சம்பவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நடைபெற்றுவருவது என்பது, நம் தரப்பு உண்மையை எடுத்துக்கூறும் திறன் இந்திய அரசிடம் இல்லை என்பதையே காட்டுகிறது.
நமது நிலைப்பாட்டை உறுதியோடு முன் வைப்பதிலோ, நமதுபலத்தை நிரூபிப்பதிலோ அல்லது , ராஜீயரீதியிலான திறன்களைக் காட்டுவதிலோ இந்த அரசு முற்றிலும் தோல்வியடைந்து விட்டது.
நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் , தில்லியில் இருக்கும் மத்திய அரசு தன்னைக் காப்பாற்றி கொள்வதிலேயே கவனமாக உள்ளது என்ற உண்மையை உணர்த்துகின்றன. நாட்டையோ, மக்களையோ காக்க இவர்களுக்கு நேரம் இல்லை என்றார்.
பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ... |
நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ... |
பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ... |
Leave a Reply
You must be logged in to post a comment.