சமூக நல்லிணக்கத்தை சீரழிக்கும் ”ராமதாசுகள்”

 சமூக நல்லிணக்கத்தை சீரழிக்கும் ”ராமதாசுகள்” நேற்று ( 30.4.13 )..இந்து பத்திரிக்கையில் ஒரு "நாலு பத்தி படம்"—திருமாவளவனும், வைக்கோவும் சிரித்து போஸ் கொடுக்கும் படம்..நேற்றைய முன்தினமும் விஜகாந்த்தும், திருமாவளவனும் சிரித்து போஸ் கொடுத்து இதே அளவு படம் வந்தது.

திடீரென இவர்கள் "உறவாட " என்ன காரணம்?..சினிமாவை வெறுக்கும் ராமதாசு முகாமிலிருந்து சினிமாக்காரர் விஜயகாந்த் முகாமுக்கு திருமா தாவக் காரணம் என்ன?

மது ஒழிப்பு நடை பயணம் மூலம், தன் கட்சிக்கு "கூட்டணிக்குள் சேரும் " அந்தஸ்தை உய்ர்த்திக்காட்ட நினைக்கும், வைக்கோவிற்கு, திருமாவின் மீது, என்ன திடீர் காதல்?

இதுமாதிரி நட்பு ஏதும் ஏற்படக்கூடாது..என அரசியலில்..ஏதாவது விதி இருக்கிறதா?—என நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது..

கடந்த வெள்ளிக்கிழமை அன்று மரக்காணத்தில் பா.ம.க.விற்கும், வி.சி.க்கும், நடந்த மோதலில், பாதிப்பு வி.சி.க்குத்தான் அதிகமாம்.வன்னியர் சங்கம், பாம,க. ஏற்பாடு செய்திருந்த மாமல்லபுரம், சித்திரை முழுநிலவு பெருவிழாவில், பேசிய ஆவேசமான உரைகளும் இதற்கு காரணமாம்..

சில மாதங்களுக்கு முன்பு, தர்மபுரி மாவட்டத்தில், வன்னிய பெண்—தலித் பய்யனுக்கும் இடையேயான காதலும், அதன் விளைவாக ஒரு கிராமமே எரிக்கப்பட்டதும், பா.ம.க. தலித் பகுதியை சூறையாடி, தர்மபுரி மாவட்டம் , பிஹார் மாநிலத்தில் உள்ளதா? என்ற சந்தேகத்தை நமக்கு ஏற்படுத்தியது..

தலித்களுக்கும், தேவர்களுக்கும், –தேவர்களுக்கும்—நாடார்களுக்கும், நாடார்களுக்கும்,–தலித்களூக்கும்—என தென் மாவட்டங்களில் அடிக்கடி சாதி மோதல்கள் நடைபெறுவது சகஜமாகிவிட்டது..

தற்போது அதுபோல மேற்கு மாவட்டங்களில், அன்புமணி—ராமதாசு—காடுவெட்டி குரு கைங்கரியத்தில்,வன்னியர்—தலித் சாதிமோதல்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது..

கடந்த 6 மாதங்களாக தமிழ்நாடு முழுதும் மாவட்டம் தோறும் சென்று.., அனைத்து பிற்படுத்தப்பட்ட சாதியினரை தலித்களுக்கு எதிராக ஒன்று திரட்டும் முயற்சியில் ராமதாசு இறங்கி சாதி மோதல்களை உருவாக்கி சமூக நல்லுணர்வை சீரழித்து வருகிறார்….

இதில் தூரதிருஷ்டம் என்னவென்றால், பாஜக தவிர எந்த அர்சியல் கட்சியும் ராமதாசின் இச்செய்கையை கண்டிக்கவில்லை..பாஜகவும், ஆர்.எஸ்ஸும் மட்டுமே தர்மபுரி மாவட்டத்தில் உடனடியாக களத்தில் இரங்கி, சமூக நல்லுணர்வை சீரமைக்கும் பணியில் இறங்கியுள்ளது.

இது ஒருபுறம் இருந்தாலும், தலித்கள்மீது, வைக்கோவுக்கும், விஜய்காந்துக்கும் என்ன திடீர் பாசம்..எல்லாம் விரைவில் தேர்தல் வருவதால் வரும் வேஷம்..இவர்களால் தாழ்த்தப்பட்ட மக்களின் இன்றைய பிரச்சினைக்கு தீர்வு ஏதாவது தரமுடியுமா/

தமிழ்நாட்டு மக்களின் குரலை சட்டமன்றத்தில் ஒலித்து குறைகளுக்கு தீர்வு காண ஆளும் கட்சிக்கு அங்குசமான எதிர்கட்சியாக செயல்படும் அந்தஸ்தை விஜயகாந்த்துக்கு நாம் கொடுத்தோம்..அவரும் அவர்கட்சியும் சட்டசபைக்கு போனால்தானே நம் பிரச்சினை பற்றி பேச..கொடுத்த வாய்ப்பை எடுத்து செயல்பட முடியத விஜயகாந்த அடுத்தவாய்ப்புக்கு ஆலாய் பறப்பது ஏனோ?—இவர்தான் திருமாவின் ஆபத் பாந்தவரோ?

சமூக நல்லிணக்கத்தை சீரழிக்க நினைத்த ராமதாசை மாவட்ட்ம் தோறும் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியமைக்கும், மரக்காணம் கலவரத்துக்கு அவர்தன் காரணம் என்பதை  வெளிப்படையாக கூறியமைக்கும், தமிழக முதல்வர் பாராட்டப்படவேண்டியவரே..

சாதி மோதல்களை உருவாக்க நினைக்கும் யாரக இருந்தாலும் அவர்களின் மீது தேசிய பதுகப்புச் சட்டம் பாய வேண்டும்..செய்யுமா தமிழக அரசு?

நன்றி ; எஸ்.ஆர். சேகர் எம்.ஏ.பி.எல்

பாஜக மாநிலப் பொருளாளர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நீதித்துறையின் பணியை, எதிர்க்க ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன 'நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன' என மக்களவை ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவ ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவில்லை எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இருஅவைகளும் நேற்று ஒத்திவைக்கப் பட்டன. ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல் நாடகத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு – அண்ணாமலை அரசியலில் தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதார ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதாரத்துடன் இணைக்க மோடி அழைப்பு கூட்டுறவு இயக்கத்தை, சுழற்சி பொருளாதாரத்துடன் இணைப்பதன் அவசியத்தை பிரதமர் ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று மோடி உரை இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று (நவ. 26), ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வ ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வழிகாட்டிய ஆர்.எஸ்.எஸ் சனிக்கிழமை (23-11-2024) அன்று வெளியான மகாராஷ்டிர சட்டப் பேரவைத் ...

மருத்துவ செய்திகள்

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...

குழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க

வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ...