தில்லி சீக்கியர் கலவரவழக்கு விவகாரத்தில் நீதி வழங்கவேண்டும் எனக்கோரி குடியரசு தலைவர் பிரணாப்முகர்ஜியை -பாஜக. சிரோமணி அகாலிதளம் உள்ளிட்ட அனைத்துக் கட்சி குழுவினர் சந்தித்தனர்.
முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி கொலையை தொடர்ந்து தில்லியில் நடந்த கலவரங்களில் ஏராளமான சீக்கியர்கள் கொல்லப் பட்டனர். இந்நிலையில் சீக்கியர் கலவரவழக்கு ஒன்றில் காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமார் அண்மையில் விடுவிக்கப்பட்டார்.
இதற்கு எதிர்ப்புதெரிவித்து தில்லியில் சீக்கியர்கள் தொடர்போராட்டங்கள் மேற்கொண்டுள்ளனர்.
தில்லியில் நடந்த கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து நீதிகிடைக்க வேண்டும்.
இதற்காக குடியரசு தலைவர் தலையிட்டு உச்ச நீதிமன்ற மேற்பார்வையிலான சிறப்புவிசாரணை குழுவை அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிடவேண்டும் என வலியுறுத்தி பிரணாப்முகர்ஜியிடம் சிரோமணி அகாலிதளம்-பாஜக. உயர்நிலை தலைவர்கள் உள்பட தெலுங்குதேசம், ஜார்க்கண்ட் முக்திமோர்ச்சா, சிவசேனை, சமாஜவாதி கட்சி, இந்தியதேசிய லோக்தளம், பிஜு ஜனதாதளம், ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகளின்சார்பில் மனு அளிக்கப்பட்டது.
பஞ்சாப் முதல்வர் பாதல் அழைப்பின்பேரில் பாஜக. மூத்த தலைவர் எல்கே. அத்வானி, எதிர்க் கட்சி தலைவர் சுஷ்மாஸ்வராஜ் ஆகியோரும் குடியரசுத் தலைவரை சந்தித்துப்பேசினர்.
சீக்கிய கலவரங்கள் தொடர்பாக சுதந்திரமான நேர்மையானவிசாரணை நடத்தவேண்டும். இதற்காக உச்ச நீதிமன்றம் மேற்பார்வையில் சிறப்பு விசாரணை குழுவை ஏற்படுத்தவேண்டும். கலவரங்களில் காவல் துறை அதிகாரிகளின் பங்கு தொடர்பாக விசாரிக்கவேண்டும். குற்றம் சுமத்தப்பட்டோர் விடுவிக்கப் பட்டது குறித்து விரிவான விசாரணை நடத்தவேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ... |
இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.