பேசியது போதும் செயல் படுவோம்

 பேசியது போதும் செயல் படுவோம் தமிழகத்தில் 1967 முதல் கடந்த 46 ஆண்டுகளாக திராவிடக்கட்சிகள்தான் மாறி மாறி ஆட்சி அதிகாரத்தில் இருந்து வருகிறார்கள் . ஜாதி , மத பேத மற்ற சமுதாயத்தைப் படைப்போம் என வாய கிழிய பேசி வந்தவர்களின் ஆட்சியில் ஜாதிச் சண்டைகள் தொடரத்தான் செய்கின்றன .

தர்மபுரியில் நடைபெற்ற ஜாதிக் கலவர வடுக்கண் மறையும் முன்பே இப்போது மரக்காணத்தில் ஜாதிக் கலவரம் வெடித்துள்ளது .

இதற்கு முக்கியமான காரணம் அரசியல் தான். தேர்தலையும் , ஓட்டுக்களையும் மையமாக வைத்து ஜாதி உணர்வுகளை வளர்த்து வரும் போக்குதான் காரணமாகும் . துரதிர்ஷ்டம் என்னவென்றால் மோதிக் கொள்ளும் இரண்டு சமூகங்களும் ஹிந்து சமூகங்களே.

இதற்கு என்னதான் தீர்வு ?

தீண்டாமை முற்றிலும் நீக்கப்படவேண்டும் . ஜாதியின் பெயரால் யாரும் உயர்ந்தவர் , தாழ்ந்தவர் கிடையாது .

வேதங்களை தொகுத்தளித்தவர் மீனவ குல பெண்ணின் மைந்தன் வியாசன் தானே …! ராமாயணத்தை எழுதியவர் வேடர் குல வால்மீகி தானே …! கடவுளுக்கு தனது கண்களையே தந்த கண்ணப்பனும் , நந்தனாரும் கடவுளுக்குப் பிரியமானவர்களே ! கனகதாசருக்காக உடுப்பி கிருஷ்ணரே கோயிலின் பின்புறமாக திரும்பி நிற்கிறாரே ! ராமானுஜர் காவேரியில் குளிக்கச் செல்லும் போது ஒரு பிராம்மண சீடரின் தோளில் கைபோட்டுச் செல்வார் . குளித்து விட்டு வரும் போது ஒரு ஹரிஜன சீடரின் தோள் மீது கைபோட்டு வருவார் . நமது மகான்கள் எவரும் தீண்டாமையை ஏற்றுக் கொண்டதில்லை .

ஹிந்து தர்மத்தில் ஜாதிக்கு இடமில்லை . ஹிந்துக்கள் அனைவரும் ஒரு குடும்பமே . இதைத்தான் ஆர்.எஸ்.எஸ் . கடந்த 90 ஆண்டுகளாக சொல்லி வருகிறது .

ஹிந்து ஒற்றுமை என்று ஆர்.எஸ்.எஸ் சொன்னால் அதை வகுப்புவாதம் , மதவாதம் என குறை கூறுபவர்கள் ஜாதி அமைப்பை ஆதரிப்பதுதான் வேடிக்கையானது .

ஆர்.எஸ்.எஸ் தலைவராக இருந்த பாளா சாகேப் தேவரஸ் கூறியது நினைவு கூறத்தக்கது .

தீண்டாமை பாவமில்லையெனில் உலகில் வேறு எதுவுமே பாவம் இல்லை . எனவே தீண்டாமை வேரும் , வேரடி மண்ணுமில்லாமல் நீக்கப்பட வேண்டும் .

பேசியது போதும் செயல் படுவோம்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ...

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...

எருக்கன் செடியின் மருத்துவக் குணம்

இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ...