பாஜக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போகும் வேட்பாளர்களின் பட்டியல் வரும் ஜூலை மாதம் வெளியிடப்படும் , அதற்கான நபர்களைத் தேர்வுசெய்ய ஒருகமிட்டி அமைக்கப்படும் என, பா.ஜ.க தலைவர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது. வேட்பாளர்கள் பட்டியலை ஜூலை மாதம் வெளியிட இருக்கிறோம், உ.பி.,யில் குறைந்தது 40 தொகுதிகளில் வெற்றிபெறுவோம். . நரேந்திரமோடியை உபியில் பிரசாரத்துக்கு பயன்படுத்திக்கொள்ளும் திட்டம் உள்ளது என்று கூறினார் ,
மோடி உபியில் போட்டியிடுவாரா என்பதை தற்போது குறிப்பிடஇயலாது . மோடியின் செயல்பாடுகள் மிகதிருப்தி அளிப்பதாக உள்ளது , இதில் எவ்வித கருத்து வேறுபாடுகளுக்கும் இடமில்லை என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளார் .
கர்நாடக தேர்தலை போன்று, நாடாளுமன்ற தேர்தலிலும் பா.ஜ.க தோல்வியைத்தழுவும் என்று சிலர் கணித்துகூறுகிறார்கள். ஆனால், அதுவேறு, இதுவேறு என்பது, நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு தெரியவரும் என்றும் அவர் கூறியுள்ளார் .
முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ... |
கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ... |
பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.