சித்தாராமய்யாவின் சித்து விளையாட்டு!

 சித்தாராமய்யாவின் சித்து விளையாட்டு! சமீபத்தில் நடந்த, கர்நாடக சட்டசபை தேர்தலில். ஆளும் கட்சியான பா.ஜா.க., வை தோற்கடித்து, அதிரடியான வெற்றியை பெற்றது, காங்கிரஸ். சில ஆண்டுளுகக்கு பின் , மீண்டும் ஆட்சி கட்டிலில் ஏறி இருப்பதால், கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியினர், சந்தோஷத்தில் மிதப்பர் என்றுதான், அனைவரும் நினைத்தனர்.

ஆனால், அங்கு நிலைமை வேறு மாதிரியாக இருக்கிறது. ஆட்சிக்கு வந்த, சில நாட்களிலேயே, காங்கிரஸ் கட்சிக்குள், கோஷ்டி பூசல், உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கர்நாடகா மாநில காங்., மூத்த தலைவரான, சிவகுமார், மாநில காங்கிரஸ் தலைவர், பரமேஸ்வரய்யா போன்றோர், முதல்வர் சித்தராமையாவுக்கு, ஆரம்பத்திலேயே குழி பறிக்க துவங்கி விட்டனர்.

'துணை முதல்வராக யாரையும் நியமிக்க வேண்டாம்; எல்லா விஷயங்களையும் நானே கவனித்துக் கொள்கிறேன்' என, கட்சி மேலிடத்திடம், கறாராக கூறிவிட்டார், சித்தராமய்யா. இதனால், துணை முதல்வர் பதவி பற்றி, கற்பனை கோட்டை கட்டியிருந்த, சிவகுமாரும், பரமேஸ்வரய்யாவும், சித்தராமய்யா மீது, 'செம'கடுப்பில் இருக்கின்றனர்.

'துணை முதல்வராக, யாரையும் நியமிக்க வேண்டாம் என்கிறாரே… இந்த ஆளுக்கு , ஏன், இந்த கொலைவெறி' என, சித்தராமய்யாவின் முதல்வர் பதவியை, காவு வாங்குவதற்கு நேரம் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

தங்கள் ஆதரவாளர்களிடம், 'பல ஆண்டுகளாக, கர்நாடகாவில் துணை முதல்வர்கள் நியமிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. ஏன், இந்த சித்தராமய்யாவே, ஒரு காலத்தில், துணை முதல்வராக இருந்தவர்தான். அரசியலில், நம்மை வளர விடாமல் செய்வதற்காக, இந்த மனுஷன், இப்படி செய்கிறார்' என, இரண்டு பேரும், தனித் தனியே புலம்புகிறனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நீதித்துறையின் பணியை, எதிர்க்க ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன 'நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன' என மக்களவை ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவ ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவில்லை எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இருஅவைகளும் நேற்று ஒத்திவைக்கப் பட்டன. ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல் நாடகத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு – அண்ணாமலை அரசியலில் தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதார ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதாரத்துடன் இணைக்க மோடி அழைப்பு கூட்டுறவு இயக்கத்தை, சுழற்சி பொருளாதாரத்துடன் இணைப்பதன் அவசியத்தை பிரதமர் ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று மோடி உரை இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று (நவ. 26), ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வ ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வழிகாட்டிய ஆர்.எஸ்.எஸ் சனிக்கிழமை (23-11-2024) அன்று வெளியான மகாராஷ்டிர சட்டப் பேரவைத் ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...