குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைப் போன்ற தலைவர்கள்தான் இந்தியாவுக்கு தற்போது தேவை. இந்தியா வளர்ச்சியை விரும்பினால் நிச்சயமாக நரேந்திர மோடியால்தான் அது முடியும் என்று ஹரியானா மாநில முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான மறைந்த பஜன்லாலில் மகனும் ஹரியானா ஜான்கித் காங்கிரஸ் தலைவருமான குல்தீப் பிஷ்னோய் புகழாரம் சூட்டியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் பஜன்லால். ஹரியானா மாநில முதல்வராக இரு முறை பதவி வகித்தவர். மத்திய அமைச்சராகவும் அவர் பதவி வகித்தார். ஆனால் 2005ஆம் ஆண்டு ஹரியானாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற பிறகு பூபிந்தர் ஹூடாவுக்கு முதல்வர் பதவி கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து சலசலப்பு ஏற்பட்டது. 2007ஆம் ஆண்டு ஹரியானா ஜான்கித் காங்கிரஸ் என்ற தனிக்கட்சியைத் தொடங்குவதாக பஜன்லால் அறிவித்தார். 2011ஆம் ஆண்டு பஜன்லால் காலமானார். அவருக்குப் பிறகு அவரது மகன் குல்தீப் பிஷ்னோய் அக்கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்றார் குல்தீப் பிஷ்னோய் தற்போது லோக்சபா எம்.பி.யாக இருக்கிறார். 2011ஆம் ஆண்டு பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தது ஹரியானா ஜான்கித் காங்கிரஸ்.
இந்நிலையில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை காந்திநகரில் நேற்று குல்தீப் பிஷ்னோய் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குல்தீப் பிஷ்னோய், நரேந்திர மோடி ஒரு முன் மாதிரியான தலைவர். வளர்ச்சித் திட்டங்களை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பதற்கு முன் உதாரணமானவர். இங்கிலாந்தில் இளைஞர்களிடம் நான் கலந்துரையாடிய போது அவர்கள் ஏகமனதாக சொன்ன ஒரு விஷயம்… இந்தியா வளர்ச்சியை விரும்பினால் நிச்சயமாக நரேந்திர மோடியால்தான் அது முடியும் என்பதுதான்.. அவர் ஆள்வதற்காகப் பிறந்தவர். அவரை முழுமையாக நாங்கள் ஆதரிக்கிறோம். இந்தியாவுக்கு அவரைப் போன்ற தலைவர்கள்தான் இப்போது தேவை. ஹரியானாவின் எந்த கிராமத்துக்குப் போனாலும் நரேந்திர மோடி உருவாக்கியுள்ள வளர்ச்சியைப் போல நமது மாநிலத்துக்கும் வளர்ச்சி தேவை என்றே வேண்டுகோள் விடுக்கின்றனர். குஜராத் மாநிலத்துக்கு இப்போதுதான் முதல் முறையாக வருகை தருகிறேன். இந்த மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்கள் என்னை மிகவும் கவர்ந்துள்ளன. வளர்ச்சிப் பாதையில் குஜராத் நடைபோடுவதற்கு காரணமே மோடிதான் என்றார்.
இதனிடையே குஜராத் மாநில இளைஞர், மாணவர் காங்கிரஸ் அமைப்பின் ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் பாரதிய ஜனதாவில் இணைந்துள்ளனர். இளைஞர் காங்கிரஸின் பொதுச் செயலாளர், மாவட்ட துணைத் தலைவர்கள், சட்டசபை தொகுதி தலைவர்கள் என ஆயிரக்கணக்கானோர் பாஜகவில் ஐக்கியமாகியுள்ளனர். குஜராத் பல்கலைக் கழகத்தின் மாணவர் காங்கிரஸும் பாஜகவில் இணைந்துள்ளது. குஜராத் பல்கலைக் கழகத்தில் பாஜகவும் அதன் மாணவர் அமைப்பும் பலவீனமாக இருக்கும் நிலையில் மாணவர் காங்கிரஸார் பெருமளவில் இணைந்திருப்பது பெரும் பலமாக கருதப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மோடி, பா.ஜ.க.,வைப் பொறுத்தவரையில் ஒரு ஆசிரியரின் மகன் நாட்டின் பிரதமராக முடியும். நான் ரயில் டீ விற்பனை செய்தவன். என்னை இந்த கட்சி மாநில் முதல்வராக்கி இருக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியில் இது சாத்தியமில்லை.. உங்கள் அனைவரையும் இந்த குடும்பத்துக்குள் இணைய அழைக்கிறேன். இன்று பாஜகவில் இணைந்துள்ள ஹரிக் டோடியா கடந்த 6 ஆண்டு காலம் மாணவர் காங்கிரஸுக்காக பணியாற்றியவர். ஆனால் ஒருமுறை கூட ராகுல் காந்தி அவரை சந்தித்து இல்லை. அதே நேரத்தில் 6 நாட்களுக்கு முன்பு பாஜகவில் இணைந்த அவர் இன்று மேடையேறியுள்ளார் என்று சுட்டிக்காட்டினார்.
அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ... |
வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.