காவிரி நீரை கொண்டு வரும் முயற்சியில் அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்

காவிரி நீரை கொண்டு வரும் முயற்சியில் அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் தமிழகத்திற்கு காவிரி நீரை கொண்டு வரும் முயற்சியில் அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என பாஜக. மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார் .

இது குறித்து, அவர் மேலும் தெரிவித்ததாவது ;

காவிரி மேற்பார்வைகுழு

தமிழ்நாட்டில் குறுவைசாகுபடிக்காக வழக்கமாக ஜூன் 12-ந் தேதி காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும். ஆனால், காவிரி நீர் தமிழகத்திற்கு திறந்துவிடப் படாததால் கர்நாடக அரசுக்கு ஆணையிடவும், காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை அமல்படுத்து வதற்காகவும் மத்திய அரசால் அமைக்கப்பட்டது காவிரி மேற்பார்வை குழு.

காவிரி நடுவர் மன்ற இறுதிதீர்ப்பை அரசிதழில் வெளியிட்டபின்பு காவிரி மேலாண்மைகுழு என்னும் நிரந்தரகுழுவை ஏற்படுத்தி இப்பிரச்சனைக்கு நிரந்தரதீர்வு காணமுயலாமல் காவிரி மேற்பார்வைகுழு என ஒரு தற்காலிக குழுவை அமைத்தது மத்திய அரசு தமிழகத்திற்கு செய்த மிகப்பெரிய தீங்காகும்.

டெல்லியில் நடந்த இக்குழுவின் கூட்டத்தில் தமிழக குறுவைசாகுபடிக்கு காவிரியில் தண்ணீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிடமுடியாது என்று அறிவித்திருப்பதன் மூலம் மத்தியஅரசால் அமைக்கப்பட்ட இக்குழுவால் தமிழகத்திற்கு எந்தபலனும் இல்லை என்பதை உணரமுடிகிறது.

மேலும் இக்குழுவால் காவிரிநீர் பங்கீட்டில் எந்த ஒரு உறுதியான முடிவும் எடுக்கமுடியாது என்பதோடு காவிரிப்பிரச்சனையில் எந்த ஒருதீர்வும் கிடைக்காது என்பது நேற்றைய கூட்டத்தின் முடிவுமூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை அமல்படுத்த முடியாத மத்திய அரசின் மெத்தனபோக்கு மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசாங்கம் நாட்டை ஆளும் தகுதியை இழந்து விட்டதையே காட்டுகிறது. சுப்ரீம்கோர்ட் உத்தரவுப்படி 2012-13-ம் பாசன ஆண்டில் தமிழகத்திற்கு வழங்கியிருக்கவேண்டிய தண்ணீரை வழங்காததோடு தற்போது குறுவைசாகுபடிக்கும் தண்ணீர் திறந்துவிடாதது தமிழக விவசாயிகளை கடும்சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 2001 ,2011-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட 10 வருட காலத்தில் தமிழக மக்கள்தொகை 97 லட்சம் அதிகரித்து 7 கோடியே 21லட்சமாக உயர்ந்துள்ளநிலையில், இதேபத்தாண்டு காலத்தில் மட்டும் 8லட்சத்து 67 ஆயிரத்து 582 தமிழகவிவசாயிகள் விவசாயத்தால் ஏற்பட்ட இழப்பீட்டை தாங்கமுடியாததாலும், நகர மயமாக்கல், தொழில் மயமாக்கல் போன்றவற்றால் விவசாயசாகுபடி பரப்பு குறைந்துவருவதாலும், விவசாயத்தை கைவிடும் விவசாயிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்அபாயம் உருவாகிவருவதை மத்திய, மாநில அரசுகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்நிலையில், சாகுபடிக்கு போதுமானதண்ணீர் கிடைக்கவில்லை என்பது நிலைமையை மேலும் மோசமாக்கி விவசாயத்தையே கைவிடவேண்டிய கட்டாயத்திற்கு விவசாயிகள் தள்ளப் படுவார்கள். தமிழக விவசாயத்தை ஒட்டுமொத்தமாக அழித்து தமிழக விவசாயிகளை தற்கொலைநிலைக்கு தள்ளும் இந்த ஆபத்தானநிலையில் இருந்து தமிழக விவசாயிகளைகாப்பது அனைத்து அரசியல் கட்சிகளின் கடமையாகும். எனவே, தமிழகத்தைச்சேர்ந்த அனைத்து அரசியல்கட்சிகளும் பாகுபாடுகளை களைந்து காவிரி தண்ணீர் கொண்டு வரும் முயற்சியில் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...