பாஜக ஆதரவால் தான் திரிணாமுல் வெற்றிபெற்றது

 மேற்குவங்க மாநிலம் ஹவுரா மக்களவை தொகுதி இடைத் தேர்தலில் பாஜக ஆதரவால் திரிணாமுல் வெற்றிபெற்றதாக காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது திரிணாமுல் காங்கிரசைசேர்ந்த ஹவுரா மக்களவை தொகுதி எம்பி அம்பிகாபானர்ஜி அண்மையில் உடல் நலக் குறைவு

காரணமாக உயிரிழந்தார். இதைதொடர்ந்து கடந்த 2ம் தேதி இந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. கடந்தமுறை காங்கிரசுடன் கூட்டணி அமைத்து திரிணாமுல் போட்டியிட்டது. வெற்றி பெற்றார்.

இடையில் ஐக்கியமுற்போக்கு கூட்டணியிலிருந்து திரிணாமுல் விலகியது. இதைதொடர்ந்து இந்த தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், காங்கிரஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகளிடையே நான்கு முனை போட்டி நிலவியது . கடைசிநேரத்தில் பாஜ வேட்பாளர் போட்டியிலிருந்து விலகிக்கொண்டார். காங்கிரசுக்கோ மார்க்சிஸ்ட்கட்சிக்கோ வாக்களிக்கவேண்டாம் என பாஜ மாநில தலைவர் ராகுல்சின்கா அறிக்கை வெளியிட்டார். இந்ததேர்தலில் சுமார் 27 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் திரிணாமுல் வெற்றிபெற்றது.

மேற்கு வங்கத்தில் மற்றகட்சிகளின் தயவு திரிணாமுல் காங்கிரசுக்கு தேவையில்லை என்பதை தேர்தல்முடிவு காட்டுவதாக மம்தா கூறினார். 2 ஆண்டுகாலம் சிறப்பான ஆட்சி தந்ததற்கு மக்கள் பரிசளித்திருக் கிறார்கள் என்றார். இதற்கிடையில் இந்தவெற்றி பாஜக அளித்த பரிசு என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. போட்டியில் இருந்து கடைசிநேரத்தில் பாஜக விலகியதால்தான் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிபெற்றது என்று காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.

தும்பையின் மருத்துவக் குணம்

தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ...

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...