கோவாவில் வெள்ளிக்கிழமை நடந்த பா.ஜ.க நிர்வாகிகள்குழு ஆலோசனை கூட்டத்தில் மூத்த தலைவர் எல்கே.அத்வானி உடல் நலகுறைவு காரணமாக பங்கேற்கவில்லை. குஜராத் முதல்வர் நரேந்திரமோடிக்கு கட்சியில் அதிக முக்கியத்துவம் தருவதால்தான் இந்த கூட்டத்தை அத்வானி புறக்கணிப்பதாக ஊடகங்கள் புரளி கிளப்புகின்றன.
இந்நிலையில் இது குறித்து பாஜக செய்தித்தொடர்பாளர் சுதான்ஷீ திரிவேதி கூறியதாவது:
பா.ஜ.க.,வில் மோடி ஓர் அணியாகவும் அத்வானி ஓர்அணியாகவும் செயல் படுவதாக பலர் வதந்திகளை பரப்பிவருகின்றனர். பா.ஜ.க.,வில் மோடி அணி, அத்வானி அணி என்றெல்லாம் ஏதும் இல்லை. அனைவரும் ஒற்றுமையாகத் தான் செயல்படுகிறோம். அத்வானிக்கு ஆதரவாக சுஷ்மாஸ்வராஜ் செயல்படுவதாக கூறுவதிலும் உண்மை இல்லை. ஊடகங்கள்தான் இதுபோன்ற தகவல்களைப் பெரிதுபடுத்துகின்றன.
பாஜகவின் தேசியசெயற்குழு கூட்டத்தில் என்ன முடிவெடுக்கப்படும் என்பது குறித்தும் பலயூகங்கள் வெளிவருகின்றன. தேசியசெயற்குழு கூட்டத்தில் எடுக்கப்படும் அனைத்துமுடிவுகளையும் வெளியிடத்தான் போகிறோம். அது வரை பொறுமைகாக்க வேண்டும் என்றார்.
புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம். |
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |
நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.