பாராளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்தப்படவேண்டும் என்று கோவா மாநில முதல்வர் மனோகர் பரிக்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:- பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் பத்து மாதங்களே உள்ளன. எனவே நாம் பிரதமர்வேட்பாளரை முடிவுசெய்ய வேண்டியது அவசியமாகும். மக்களின் கருத்துப்படி மோடியை பிரதமர்வேட்பாளராக முன்நிறுத்த வேண்டும். இதை நான் சொல்லவில்லை. மக்கள் சொல்கிறார்கள். நரேந்திர மோடி நல்ல திறமைசாலி. காங்கிரஸ்காரர்களே இதை ஏற்று கொள்கின்றனர் . மோடி நாட்டை வளப்படுத்துவார் என்ற கருத்து நாடெங்கும் வலுப்பெற்று வருகிறது .
நல்ல நிர்வாகியான அவரை முன்நிறுத்தினால் பாஜக.வுக்கு கூடுதலாக 4 முதல் 5 சதவீதம் வரை ஓட்டுக்கள் கிடைக்கும். இதனால் தேர்தலில் பாஜக.வுக்கு 220 எம்.பி.க்கள் கிடைப்பார்கள். இது பாஜக. ஆட்சிக்கு வழிவகுக்கும் என்றார்.
பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ... |
உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.