வரும் 2014 ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் : உ.பி.யில் 42 தொகுதிகளில் சூறாவளிபிரசாரம் செய்ய நரேந்திர மோடி திட்டமிட்டு உள்ளார்.
பா.ஜ.க. தேர்தல் பிரசார குழுவின் தலைவராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து சில சச்சரவுகள் வந்தாலும் ஆனால் அவர் இவற்றைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் தனக்கு அளிக்கப்பட்டபொறுப்பை சிறப்பாக நிறைவேற்றும் வகையில் மோடி காய்நகர்த்தி வருகிறார்.
இதில் முதல் கட்டமாக உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக.வின் செல்வாக்கு மிக்கதொகுதிகளை பட்டியலிட்டு வைத்திருக்கும் அவர், டியோரியா, கோராக்பூர், வாரணாசி,குஷி நகர், மஹாராஜ் கஞ்ச், பால்லியா, சுல்தான்பூர், லக்னோ உன்னாவ், துமாரிகஞ்ச், பஹ்ரியாச், மீரட், தவுர்ஹரா, லகிம்பூர், காசியாபாத், கான்பூர், ஆக்ரா உள்ளிட்ட 42 தொகுதிகளை சூறாவளிபிரசாரம் செய்வதற்காக தேர்ந்தெடுத்துள்ளார்.
1998ம் வருடம் பாராளுமன்ற தேர்தலில் உபி.யில் உள்ள 80 தொகுதிகளில் 57 தொகுதிகளை பாஜக. கைப்பற்றியது. 2004 மற்றும் 2009 பாராளுமன்றதேர்தலில் வெறும் 10 இடங்களை மட்டுமே கைப்பற்றிய பாஜக., வரும் 2014 தேர்தலில் பெருவாரியான தொகுதிகளை கைப்பற்றும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.
குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ... |
உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ... |
கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.