உத்தர்காண்டில் உயிருக்கு போராடியவர்களிடம் கொள்ளை

 கேதார்நாத் மழை – வெள்ளசேத துயரங்களுக்கு இடையே, உயிருக்குபோராடிய பக்தர்களிடம் கொள்ளையடித்தவர்கள் பிடிபட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.1 கோடிக்கும் அதிகமான ரொக்கப் பணம் மற்றும் தங்கநகைகள் மீட்கப்பட்டுள்ளன.

வரலாறு காணாத மழைவெள்ளத்தினால், ‘இமாலய சுனாமி’ என அழைக்கும் அளவுக்கு உத்தரகாண்ட் மாநிலத்தில் மிகப் பெரிய உயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ளது. புனித தலமான கேதார்நாத் மிகவும் அதிகஅளவுக்கு இந்தவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த கோவிலுக்கு வந்த ஏராளமானபக்தர்கள் பலியானார்கள்.

அவர்களுடைய உடல்கள் அனைத்தும் அகற்றப்பட்டு, கேதார்நாத்கோவிலில் வழிபாடு தொடங்கியது. இந்நிலையில், கடந்த ஒருவாரமாக வெள்ளத்தின் பிடியில் சிக்கித்தவித்த கேதார் நாத்தில் பலியானவர்களிடமும், உயிருக்குபோராடிய பக்தர்களிடமும் சாமியார் போர்வையில் சிலர் கொள்ளையடித்து இருப்பது நெஞ்சை பதைபதைக்கவைக்கிறது.

அப்படி கொள்ளையில் ஈடுபட்ட சிலர், மீட்புபணியில் ஈடுபட்டுள்ள இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்புபடை போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மீட்புபடையினரால் கைதுசெய்யப்பட்டு உள்ளனர். வெள்ளப் பகுதியில் இருந்து மீட்கப்பட்டவர்களுடன் அந்த கொள்ளையர்களும் ஹெலிகாப்டரில் வர முயன்ற போது பிடிபட்டனர்.

அவர்களில் சிலர் சுமக்கமுடியாத அளவுக்கு கனமான பைகளை வைத்திருந்தனர். அந்த பைகளுடன்தான் ஹெலிகாப்டரில் ஏறுவோம் என அவர்கள் அடம்பிடித்ததால் மீட்புபடையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர்களுடைய உடமைகளை சோதனையிட்ட போது, அந்த பைகளில் பக்தர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளும், கட்டுக்கட்டாக கரன்சிநோட்டுகளும் இருந்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

வெள்ளத்தில் பலியானபக்தர்களின் உடலில் உள்ள நகைகளை மட்டுமின்றி, உயிருக்குபோராடிய பக்தர்களிடம் இருந்தும் அவர்கள் கொள்ளையடித்தது தெரியவந்துள்ளது. சில உடல்களின் கைவிரல்களை வெட்டி எடுத்தும் நகைகளை எடுத்து இருப்பதும் தெரியவந்துள்ளது.கேதார்நாத்தில் உள்ள பிரதானகோவிலில் உள்ள உண்டியல்கள் பாதுகாப்பாக உள்ளன. அதேநேரத்தில் மற்ற சிறு கோவில்களில் இருந்த உண்டியல்களும் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டில்லியில் குடிநீர் இல்லை ஆனால ...

டில்லியில் குடிநீர் இல்லை ஆனால் ஆல்கஹால் கிடைக்கிறது மோடி குற்றம்சாடியுள்ளார் 'டில்லியில் குடிநீர் இல்லை. ஆனால் ஆல்கஹால் கிடைக்கிறது' என ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவைய ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவையா சபாநாயகர் அப்பாவுக்கு அண்ணாமலை கேள்வி சபாநாயகர் அப்பாவுக்கு, பாலியல் கொடுமை மேடை நகைச்சுவையா என ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர்வு காணாத திமுக அரசு – அண்ணாமலை நெற்பயிர்களின் ஈரப்பதம் அதிகரிப்பது வழக்கமான ஒன்று. இதற்கு நிரந்தரத் ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவ ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு அவசியம் – ராஜ்நாத் சிங் வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெ ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் வரிசையில் முதல் இடம் டிரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நித ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நிதி – தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி “தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என ...

மருத்துவ செய்திகள்

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...