ஐ.மு.,கூட்டணி அரசு, கடந்த 9 ஆண்டு கால ஆட்சியில், அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்துள்ளது; காங்கிரஸ் இல்லாத நாட்டைஉருவாக்க, அனைத்து எதிர்க்கட்சிகளும் முன்வரவேண்டும்,” என்று பா.ஜ.க., தலைவர், ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.
லக்னோவில் செய்தியாளர்களிடம் இது குறித்து மேலும் அவர் கூறியதாவது: பொருளாதாரவிவகாரம், பாதுகாப்பு, தூதரக உறவு என்று பல துறைகளில் காங்கிரஸ் கட்சி, கடந்த ஒன்பது ஆண்டுகளாக தோல்விமேல் தோல்வியை தழுவியுள்ளது. இந்ததோல்வியை மக்களின் கவனத்தில் இருந்து திசைதிருப்புவதற்காக, காங்கிரஸ் மதச் சார்பின்மை – மதவாதம் என விவாதத்தை தொடங்கி வைத்துள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்கோ உரியதந்திரம்.
ஓட்டுவங்கி அரசியல் நடத்தும் காங்கிரஸ்கட்சி, மக்களிடையே பிரித்தாளும் கொள்கையை கடைபிடிக்கிறது. இந்நாட்டை, காங்கிரஸ் அல்லாத நாடாக உருவாக்கவாருங்கள் என அனைத்து கட்சிகளையும் கேட்டுகொள்கிறேன். ஐ.மு.,கூட்டணி ஆட்சிக்குவந்த பிறகு, நாட்டின் பொருளாதார நிலைமை மிகவும் மோசம் அடைந்துள்ளது. நிதி மற்றும் நடப்புகணக்கு பற்றாக்குறை அதிகரித்துகொண்டே போகிறது. உ.பி.,யில் ஆளும் கட்சியாக உள்ள சமாஜ்வாதி, எதிர்க் கட்சியாக உள்ள பகுஜன்சமாஜ் கட்சிகள் நிர்ப்பந்தம் காரணமாக, காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கின்றன. உபி.,யில் இருந்து, 40 இடங்களை பெறுவதை, பா.ஜ., இலக்காககொண்டுள்ளது. இவ்வாறு ராஜ்நாத்சிங் கூறினார்.
மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ... |
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |
உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ... |
Leave a Reply
You must be logged in to post a comment.