குஜராத் முதல்வர் நரேந்திரமோடி மீது, காங்கிரஸ்க்கு இருக்கும் வெறுப்பின் காரணமாகவே, சிபிஐ., மூலம் அவருக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்படுகிறது,” என்று பாஜக செய்தித்தொடர்பாளர், ரவிசங்கர் பிரசாத் கருத்து தெரிவித்துள்ளார்.
இஸ்ரத்ஜஹான் , சோராபுதீன், என்கவுன்டர்’ வழக்குகளை விசாரித்துவரும், சிபிஐ., அமைப்பு அம்மாநில முதல்வர் நரேந்திரமோடியை, அந்த வழக்குகளில் சிக்கவைக்க முயற்சி செய்து வருகிறது.
இது குறித்து , பா.ஜ.க., செய்தித்தொடர்பாளர், ரவிசங்கர்பிரசாத் நேற்று கூறியதாவது:
நரேந்திர மோடியை, குஜராத்மக்களும், பிற மாநிலத்தவர்களும், சிறந்தநிர்வாகி என்றும், குற்றமே காணமுடியாதவர் எனவும் பாராட்டுகின்றனர். ஆனால், காங்கிரஸ் கட்சியோ, அவர்மீது கொண்ட வெறுப்புணர்வு காரணமாக, சிபிஐ., மூலம் இடையூறு ஏற்படுத்தமுயல்கிறது.
சிபிஐ., அமைப்பு, கூண்டுக்குள் சிக்கியகிளி போன்று உள்ளது என, சுப்ரீம்கோர்ட் சமீபத்தில் கண்டனம்தெரிவித்ததை, அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். என்று அவர் கூறினார்.
நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ... |
உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ... |
சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.