குஜராத் மாநில பாஜக. தலைவர்களில் முக்கியமானவரும் , வாஜபாய் அமைச்சரவையில் இணை அமைச்சராக பதவி வகித்தவருமான பாவ்னாசிக்காலியா கடந்த (ஜூன்) மாதம் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
அவருக்கு இரங்கல்தெரிவிக்கும் அஞ்சலிகூட்டம் குஜராத் மாநிலம், ஜூனகத் பகுதியில் நடைபெற்றது. இதில் பாஜக. மூத்த தலைவர் அத்வானி, பாஜக. தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் . குஜராத் முதல்வர் நரேந்திரமோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
இதில் பாவ்னா சிக்காலியாவுக்கு அஞ்சலிசெலுத்தி பேசிய ராஜ்நாத்சிங், ‘பாஜக.,வின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்த தலைவர்களில் பாவ்னா மிகமுக்கியமானவர். பாராளுமன்றத்திலும் அவர் சிறப்பாகபணியாற்றினார். அவரை இழந்தது வேதனை தருகிறது என்றார்.
‘பாவ்னாவின் மறைவுகுறித்து மோடி எனக்கு தொலைபேசியின் மூலம் தகவல் தந்தார் . அவரது மறைவு பாஜக.வுக்கு மிக பெரிய இழப்பாகும்’ என அத்வானி கூறினார்.
‘மாநகராட்சி தேர்தலில் கவுன்சிலர்பதவிக்கு போட்டியிடுகிறீர்களா? என்று பாவ்னாவிடம் நான் கேட்ட போது சற்றும்தயங்காமல் ஒப்புக்கொண்டார்.
நான்கு முறை எம்பி.யாகவும், ஒரு முறை மத்திய இணைமந்திரியாகவும் பதவிவகித்த யாரும் அவ்வளவு எளிதில் கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட முன்வரமாட்டார்கள். நான் கூறியதற் கிணங்க அவர் கவுன்சிலர் தேர்தலில்கூட போட்டியிட்டார்’ என்று
பாவ்னாவின் கட்டுப்பாட்டை நினைவு கூர்ந்து நரேந்திர மோடி பேசினார்.
இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ... |
தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ... |
ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ... |
Leave a Reply
You must be logged in to post a comment.