சோலார் மின்மோசடி விவகாரத்தில் முதல்வர் உம்மன் சாண்டி பதவி விலககோரி பாரதிய ஜனதாவும், இடதுசாரிகளும் நடத்திய கேரள தலைமைச்செயலக முற்றுகை போராட்டத்தில் வன்முறைவெடித்தது.
திருவனந்தபுரத்தில் உள்ள தலைமை செயலகத்தை நூற்று கணக்கான இடதுசாரி கட்சிதொண்டர்களும், மாணவர் சங்க உறுப்பினர்களும் முற்றுகையிட்டு காவல் துறையினரின் தடப்புகளை மீறி அவர்கள் தலைமை செயலகத்திற்குள் நுழையமுயன்றனர். இதனிடையே உம்மன்சாண்டியின் ராஜினாமாவை வலியுறுத்தி பாஜக.,வினர் ஊர்வலமாக வந்து தலைமைச் செயலகத்தை முற்றுகை யிட்டனர். கொட்டிய மழையிலும் அவர்கள் உம்மன் சாண்டிக்கு எதிராக கோஷமிட்டனர். அவர்களை போலீசார் விரட்டியடித்தனர்.
ஒரேசமயத்தில் இடதுசாரிகள் மற்றும் பாஜக.,வினரும் தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கேரளாவின் பலநகரங்களில் சோலார் மின்கட்டமைப்பு ஏற்படுத்தி தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்தவர்களுக்கும் உம்மன் சாண்டியின் உதவியாளர் ஒருவருக்கும் தொடர்பிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பொறுப்பெற்று முதல்வர் பதவியை உம்மன்சாண்டி பதவி விலகவேண்டும் என்று கேரள சட்ட சபையிலும் எதிர்கட்சிகள் கடந்த பத்து நாட்களாக ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர்.
1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ... |
முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ... |
கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.