வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தின் சார்பில் "சபதம் ஏற்பு தினம்" நேற்று மாலை சென்னை சாளிக்ராமத்தில் அமைந்துள்ள மாதா அம்ருதான்ந்தமயி மடத்தில் அனுசரிக்கப்பட்டது.
எளிமையாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் ஹிந்து முன்னணியின் நிறுவனர் தலைவர் வீரத்துறவி ஸ்ரீ ராமகோபாலன் ஜி அவர்கள் தலைமையில் கூடியிருந்தோர் அனைவரும் அகண்ட பாரதம் அமைக்க சபதம் ஏற்றனர்.
ஸ்ரீ சிவகுமார் ஸ்வாமிகள் (முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி) சிறப்புரை ஆற்றினார்கள்.
வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் திரு பால கௌதமன் "தமிழகத்தில் பயங்கரவாதம்" என்கிற தலைப்பில் காணொலி அமைப்புடன் கூடிய உரையாற்றினார்.
பாஜக மாநிலத் தலைவர் திரு.பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களும் எழுத்தாளர்-சொற்பொழிவாளர் பேராசிரியர் சாமி தியாகராஜன் அவர்களும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பு சேர்த்தனர்.
திரு.சாரதி கிருஷ்ணன் அவர்களும் திரு.வெங்கடாத்ரி அவர்களும் தேச பக்தி பாடல்களைப் பாடினர்.
திரு.ரங்கநாதன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
சபதம்
சர்வ சக்தி வாய்ந்த இறைவனையும் நம் முன்னோர்களையும் நினைவில் கொண்டு சபதம் ஏற்கிறேன்.
1947-ல் தேசம் பிரிவினை ஆன நாள் முதல் தொடர்ந்து மிகவும் பலவீனம் அடைந்து வந்துள்ளது.
மத்திய அரசின் தவறான கொள்கைகளினால் நாட்டிற்கு உள்ளும் வெளியிலும் பிரிவினைவாதிகளும் பயங்கரவாதிகளும் பலமடைந்து வருகிறார்கள்.
நாட்டின் செல்வவளம் குறைந்து வருகிறது.
இந்த நிலையை மாற்ற பாரதம் மீண்டும் அகண்ட பரிபூரண ஹிந்துஸ்தானமாக மாற வேண்டும்.
பக்தியும் சக்தியும் வாய்ந்த ஒருசிலர் முனைந்து முற்பட்டால் இந்த உணர்வை பரப்ப முடியும். இதற்காக என்னை நானே அர்ப்பணித்துக் கொள்கிறேன்.
இந்த சபத்த்தை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்பேன். என்னுடைய தொடர்பில் வருகிற அனைவருக்கும் இந்த உணர்வை ஏற்படுத்துவேன்.
இதற்கு முதல் படியாக பாரத நாடு கடந்த ஆயிரம் ஆண்டுகளில் இழந்த நிலப்பரப்பை மீட்போம்!
இழந்த ஹிந்துக்களை மீண்டும் ஹிந்துக்களாக்குவோம்!
இழந்த கோவில்கள் அனைத்தையும் மீட்போம்!
இருக்கும் கோயில்களை உயிரோட்டம் உள்ளவைகளாக மாற்றுவோம்!
பாரதத்தை ஹிந்து சாம்ராஜ்யம் என்று அறிவிக்க வைப்பதற்காக அனைத்து தியாகங்களையும் செய்வேன் என்று உறுதி பூணுகிறேன்!
நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ... |
ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ... |
டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.