நாடு எக்கேடு கெட்டு போனால் என்ன ? என் மதம் வளர வேண்டும் அதுவல்லவா மதவாதம் ? பா ஜ க வையும் அதன் அனுதாபிகளையும் மதவாதிகள் என்று தீய சக்திகள் முன் நிறுத்த முயல்கின்றன !! பா ஜ க வை ஆதரித்தால் எங்கே தாங்களும் மதவாத வட்டத்திற்குள் வந்து விடுவோமோ என்கிற பயத்தில் பல சாமான்யர்கள் தங்களை வெளியே பா ஜ க அனுதாபி என அடையாளப் படுத்திக் கொள்வதில்லை.
மதவாதம் என்பது என்ன ? தேசம் எக்கேடு கெட்டு போனாலும் பரவாயில்லை தன் மதமே முக்கியம். தன் மதத்தின் கோட்பாடுகளை நம்பும் மக்களின் எண்ணிக்கை பெருக வேண்டும். தன் மதத்தை பின்பற்றும் மக்களுக்கு மட்டும் சலுகைகள் வேண்டும். அதை செய்து தரும் கட்சிகளுக்கே நான் ஒட்டு போடுவேன். இப்படிப்பட்ட கொள்கைகளுடன் இருப்பதல்லவா மதவாதம் திருவாளர் பொது ஜனங்களே ? இப்படிப்பட்ட கொள்கையை ஊட்டி வளர்க்கும் கட்சிகள் தானே மதவாத கட்சிகள் ?
உத்தர் பிரதேசத்தில் ஒரு முறையில்லாமல் கட்டப்பட்ட மசூதியின் சுவரை இடித்ததற்கு ஒரு கலெக்டரையே தூக்கி விட்டது முலாயம் சிங் அரசு. அதுவும் முஸ்லீம்களிடம் இருந்து குற்றசாட்டு வந்த நாற்பதே நிமிடங்களில் கலெக்டரை தூக்கி விட்டதாக பெருமை பேசுகிறார் அந்த முதல்வர். காங்கிரஸ் அரசோ முஸ்லீம் லீக் போன்ற கட்சிகளுடன் கூட்டனியில் இருந்துக் கொண்டு அவர்களை கால்களை கழுவி ஒட்டுக்காக எதையும் செய்து தரும் நிலையில் உள்ளது. கேரளாவிலும், தமிழகத்திலும் கிறிஸ்துவ மத வியாபாரிகளுக்காக ஆளும் கட்சிகள் எதையும் செய்து தரும் நிலையில் பிச்சைக்காரர்களாக ஓட்டுப் பொறுக்கிக் கொண்டு இருக்கிறார்கள். இதெல்லாம் மதவாதம் இல்லையா திருவாளர் பொது ஜணங்களே ?
80 சதவீதம் இந்த நாட்டில் இருக்கும் மக்களை ஒன்று சேர்க்க பாடுபடும் கட்சியை மதவாதம் என்கிறார்கள். ஆனால் அந்த 80 சதவீதத்தை கூறுப் போட்டு அரசியல் செய்து மீதமுள்ள 20 சதவீத சிறுபான்மை ஓட்டுக்களை பல சலுகைகள் தந்து ஓட்டுப் பொறுக்கும் கட்சிகள் மதசார்பற்ற கட்சிகளாம். என்ன கொடுமை இது ?
பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ... |
இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ... |
நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.