பாகிஸ்தானில் ஹோஷியார் பூர் கோட்லக்பாத் சிறையில் இந்திய தண்டனைகைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 11 கைதிகள், தங்களை சுட்டுக்கொன்று விடுங்கள் என உருக்கமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கிர்பால்சிங், குல்தீப்சிங், தரம்சிங், முகமது பரீத், திலக்ராஜ், மக்பூல்லோக், அப்துல் மஜீத், சம்புநாத், மொஹிந்தர்சிங், சுராஜா ராம், பன்வாசி ஆகிய 11 கைதிகள், “தினம்தினம் இந்தச் சிறைச் சாலையில் கொடுமைகளை அனுபவித்துவருகிறோம். மன வேதனையுடன் தண்டனையை கழிப்பதற்குபதிலாக அனைவரும் செத்துமடிவதை விரும்புகிறோம். எங்களை சுட்டுக்கொன்று விடுங்கள்’ என இந்திய, பாகிஸ்தான் அரசுகளை அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் இந்திய அரசுக்கு எழுதிய கடிதநகலை மாநிலங்களவை பா.ஜ.க எம்பி.கண்ணா செய்தியாளர்களிடம் வெளியிட்டார்.
அந்தக்கடிதத்தில் மேலும் 4 பெண்கள் உள்பட 21 பேர் மன உளைச்சலில் உள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப் போவதாகவும் கண்ணா தெரிவித்தார். லாகூர்சிறையில் இருந்த சரப்ஜித்சிங் சிறையிலேயே அடித்து கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் சிறைகளில் தற்போது 200க்கும் அதிகமான இந்தியர்கள் தண்டனை அனுபவித்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ... |
ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ... |
அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ... |
Leave a Reply
You must be logged in to post a comment.