வருகிற செப்டம்பர் 26-ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் பா.ஜ.க இளைஞரணி மாநாட்டில் பாஜக.,வின் தேர்தல் பிரசாரக்குழுத் தலைவரும், குஜராத் முதல்வருமான நரேந்திரமோடி பங்கேற்கிறார்.
இதுகுறித்து பா.ஜ.க தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது. பா.ஜ.க தேசிய நிர்வாகிகள், மாநிலத் தலைவர்களின்கூட்டம் சமீபத்தில் தில்லியில் நடைபெற்றது. நடப்பு அரசியல்நிலவரங்கள் குறித்தும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெறுவது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
நம்நாட்டில் 35 வயதுக்கும் குறைவானவர்கள் 60 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கின்றனர். அதுபோல விவசாயிகள், மீனவர்கள், எஸ்சி., எஸ்.டி.யினர் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இவர்களை ஈர்ப்பதற்காக நாடுமுழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த முடிவுசெய்துள்ளோம்.
அதன்படி வரும் செப்டம்பர் 26ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் மாபெரும் இளம்தாமரை என்ற இளைஞர்கள் மாநாட்டில் அகில இந்திய தேர்தல் பிரசாரக்குழுத் தலைவர் நரேந்திரமோடி பங்கேற்கிறார்.
அதேபோன்று அக்டோபர்மாத இறுதியில் தமிழகத்தில் நடைபெறும் மீனவர்கள் மாநாட்டில் மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்கிறார்.வரும் மக்களவைத்தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் ஊழல்களும், நிர்வாக திறமையின்மையால் பல்வேறுதுறைகளில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுபோல நரேந்திரமோடிக்கு நாடுமுழுவதும் அதிகரித்து வரும் செல்வாக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
காங்கிரஸ் ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் மிகப் பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனைதடுக்க பிரதமர் மன்மோகன்சிங், நிதி அமைச்சர் ப. சிதம்பரம், திட்டக் குழு துணைத்தலைவர் மாண்டேசிங் அலுவாலியா ஆகியோர் தவறிவிட்டனர். இவர்களிடம் புதியதிட்டங்கள் எதுவும் இல்லை. இதுகுறித்தும் தேர்தலில் பிரசாரம்செய்வோம்.
ஈழத் தமிழர்களுக்கு அனைத்து உரிமைகளும்கிடைக்க இலங்கை அரசுக்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்கவேண்டும். தமிழர்களின் மறு வாழ்வுக்கு அனைத்து விதத்திலும் இந்தியா உதவவேண்டும் என்பதே பா.ஜ.க.,வின் நிலை என்றார் முரளிதர ராவ்.
ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ... |
செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.