பாதுகாப்புவசதிகள் குறைபாட்டால் ஆண்டுக்கு ரூ.44 ஆயிரம்கோடி உணவுப்பொருள் வீணாவதாக மத்திய அமைச்சர் சரத்பவார் கூறுவது அவரது இயலாமையை காட்டுகிறது , அவர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்ய வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.
அகில இந்திய பா.ஜ.க விவசாய அணியின் செயற் குழு உறுப்பினர் எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக் கிழமை கூறியதாவது : நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்வி பதிலளித்த வேளாண் அமைச்சர் சரத் பவார், நாட்டில் சரியானவகையில் உணவுப்பொருள்களை பாதுகாக்கவோ, பதப்படுத்தவோ உரிய கட்டமைப்புவசதிகள் இல்லாததால், ஆண்டுக்கு ரூ.44 ஆயிரம்கோடி உணவுப்பொருள்கள் வீணாவதாக தெரிவித்துள்ளார். இதில் ரூ.13,309 கோடி காய்கறிகள் , பழங்கள் வீணாவதாகவும் அவரது குறிப்புதெரிவிக்கிறது.
நாடு சுதந்திரமடைந்து 66 ஆண்டுகளில் பெரும் பான்மையான ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது காங்கிரஸ்கட்சிதான். மனித உயிருக்கு அத்தியாவசியமான உணவுப்பொருள் உற்பத்தியிலும், விவசாயிகள் ஊக்குவிப்பிலும், விளைபொருள்கள் விநியோகத்திலும், சேமிப்பிலும் காங்கிரஸ் கட்சியின் அரசால் இது வரை ஒன்றுமே செய்யப்படவில்லை என்பது தான் அவரது கருத்தின்மூலம் வெளிப்படுகிறது.
வாஜபாய் பிரதமராக இருந்த போது, பிரதம மந்திரி கிராம சாலைத்திட்டம் என்பது அறிமுகப்படுத்தப் பட்டது. இது கிராமசாலைகள் நகர சாலைகளோடு இணைக்கும் திட்டமாகும். பா.ஜ.க ஆட்சிக்குப்பிறகு வந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, வாஜபேயி கொண்டு வந்த திட்டத்தை நடைமுறைப் படுத்தவில்லை. இது நடைமுறைப் படுத்தியிருந்தால், கிராமப்புறத்தில் விளையும் உணவுப்பொருள்கள், தடையின்றி நகரப்பகுதிக்கு வந்துசேர வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். இது இல்லாததால் கிராமப்புறத்தில் விளையும் காய்கறி, பழங்கள், முறையான முறையில் சந்தைப்படுத்த முடியாமல் அழுகிவீணாகின்றன.
நாட்டில்விளையும் நெல், கோதுமை, பூக்கள், காய்கறி, பழங்கள் போன்றவை மக்களுக்கு சென்றடைவதில் மத்திய அரசிடம் சரியானதிட்டமிட்ட செயல்பாடுகள் இல்லை. மத்திய அரசு சார்பில் நாட்டில் மாவட்டம் தோறும் சேமிப்புக்கிடங்கு அமைத்தலும், விளையும் பகுதியிலேயே உணவுப்பொருள்களை பதப்படுத்தும் மையம் அமைத்தலும், உணவுப் பொருள்களைக் கொண்டு மதிப்புகூட்டுதல் பொருள்கள் தயார்செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். முந்திரியை பிரித்தெடுக்கும் இயந்திரவசதிகள் தமிழகத்தில் போதுமான அளவு இல்லாததால், கேரளாவுக்கு கொண்டுசெல்லும் நிலை உள்ளது. மலர்கள்பூக்கும் பகுதியிலிருந்து வெளிநாடுக்கு விமானம்மூலம் தனியாரால் கொண்டு செல்லப்படுகிறது. உள்ளூர்மக்களுக்கு அது பயன்படுவதில்லை. மீன்களை பதப்படுத்தும் வசதிகள் கடலோரமாவட்டங்களில் சரியாக அமைக்கப்படவில்லை. இவைகளை முறையாக மாநில அரசுகளின் பங்களிப்புடன் செய்தாலே, நாட்டில் ஏழைகளுக்கு தாராளமாக உணவுப்பொருள் அளிப்பதும், பஞ்சத்தை போக்கவும் முடியும்.
இதையெல்லாம் செய்யாமல் ஆண்டுக்கான இழப்பை வெட்கமின்றிதெரிவிக்கும் மத்திய அமைச்சர் சரத்பவார் பதவியில் நீடிக்க தகுதி யில்லாதவர் ஆகிறார் என்று கருதுவதாக அவர் தெரிவித்தார்.
பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ... |
அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ... |
நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.