சொல்வது ஒன்று செய்வது ஒன்று என இல்லாமல் சொன்னதைசெய்கிறார் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி. இதனால் தான் அவரை பெண்களுக்கு பிடித்திருக்கிறது என பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் ஸ்மிரிதி இராணி கூறியுள்ளார் .
அகமதாபாத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கூறியதாவது: ராஜீவ்காந்தி காலம் எல்லாம் போய்விட்டது. முதல்வர் நரேந்திரமோடி தான் சொன்னதைச் செய்கிறார். அவர் செய்வதை இங்குள்ள பெண்கள் பாராட்டு கிறார்கள். வெறுமனே அவர் கவர்ச்சிக்காக எதையும் செய்வதில்லை. மாறாக உண்மையிலேயே அனைவருக்கும் பயன்படும்படியான திட்டங்களைத் தான் நிறைவேற்றுகிறார்.
இதுதான் பெண்களை கவர்ந்துள்ளது. பெண்கள்யாரும் நம்பமாட்டார்கள். அப்படி நம்பி விட்டால் கடைசிவரை அவர்களுக்கு துரோகம் செய்யமாட்டார்கள். விசுவாசமாக இருப்பார்கள். பெண்கள் சுயமாக எதையும்செய்வதில்லை, வீட்டில் உள்ள ஆண்களின் ஆதிக்கத்தின் கீழ் தான் அவர்கள் செயல்படுகிறார்கள் என்று தவறான ஒருகருத்து நிலவி வருகிறது. அதுதவறு. 2 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 25 பெண்களை நான் குஜராத் அழைத்துவந்தேன். மாநிலம் முழுவதும் அவர்கள் சுற்றிப்பார்த்தனர். பின்னர் நரேந்திர மோடியை அவர்கள் சந்தித்தனர். அப்போது எதுசரியாக இருக்கிறது, எது இல்லை என்று அவர்களிடம் கேட்டார்மோடி. அப்போது பெண்கள் கூறிய கருத்துக்களையும், யோசனைகளையும் அவர் உன்னிப்புடன் கேட்டுக்கொண்டார். பெண்களின் கருத்துக்கு மதிப்புகொடுத்து உண்மையான அக்கறையுடன் அவர்கேட்டார். மேலும் அவர்கள் சொன்ன பலயோசனைகளை உடனடியாக அமல்படுத்தவும் அவர் உத்தரவிட்டார் என்றார் ஸ்மிரிதி இராணி.
Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ... |
நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ... |
முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.