ஞானி போன்றவர்கள் ஞானோபதேசம் செய்யலாமா?

 "கடந்தகாலத்தை" மறந்துவிடும்…"ஞாபகமறதி "–வியாதி இந்தியர்களுக்கு அதிகம் என்பதால், ஞானி போன்றவர்கள் "ஞானோபதேசம் " செய்கிறார்கள்…

"தனி நபர் வழிபாடு " என்பதும், "தனிநபர் துதி" என்பதும், இந்தியாவில் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே சொந்தமானது..என்பது ஞானிக்கு தெரியாதது அல்ல..

நேருவுக்கு பிறகு ( சாஸ்திரி தவிர )..இந்திரா–ராஜீவ்—சோனியா (நிழல் பிரதமர் )—ராகுல் என குடும்ப அரசியல், தனிக்குடும்ப அரசியல்,…ஒரே குடும்ப அரசியல் என்ற் காங்கிரசை விமர்சனம் செய்வதை ஞானியின் மனம் ஏற்காது..ஏனெனில் அது பாஜக ஆதரவு நிலைப்பாடு ஆகிவிடும் அல்லவா?

1966 இல் லால்பஹதூர் சாஸ்திரி மறைந்த போது அவருக்கு அடுத்த இடத்தில் இருந்த மொரார்ஜி தேசாயை ஓரங்கட்டிவிட்டு நேருவின் புதல்வி இந்திராகாந்தியை பிரதமராக்கியது மாபெரும் ஜனநாயக பின்னணியோ ?

இந்திராவிற்கு சமமாக காங்கிரசில் யாருமே இல்லாததால், 20 ஆண்டுகாலம் அவரும் அவரது மகன் ராஜீவ் காந்தியும், பிரதமர் பதவியை வகித்தார்கள் என்பதும் ஜனநாயகத்திற்கு வலு சேர்க்கும் மாபெரும் பனி என்பது ஞானியின் வாதமோ?

1980இல் ஜனதா கட்சியின் ஆட்சி கவிழ்ந்த போது பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் கோஷம் என்ன தெரியுமா? உங்களில் யார் பிரதமர் ( ஜனதா கட்சியில் )–எங்களில் ( காங்கிரசில் )இந்திரா காந்தி பிரதமர் ..ஸ்திரமான ஆட்சி–வலுவான பிரதமருக்கு  காங்கிரசுக்கு வாக்களியுங்கள் என்ற காங்கிரசின் பிரச்சாரம் ஞானிக்கு தெரியாதா?

"நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக" என் கருணாநிதியும் –தன பங்குக்கு  காங்கிரசுக்கு அடித்த ஜால்ரா ஞானிக்கு நினைவில்லையோ –இப்படி 33 ஆண்டுகளுக்கு முன்பே பிரதமர் யார் என்பதை சொல்லி காங்கிரஸ் கட்சி மற்ற கட்சிகளை விட முன்னணியில் உள்ளது என்று பறை சாற்றியது அன்றைக்கு நல்லது இன்றைக்கு கெட்டதோ..

1989 இல் எதிர் கட்சிகளிடையே ஒற்றுமை இல்லாததை சுட்டிக்காட்டி, அவர்களால் பிரதமர் வேட்பாளர் யார் என்று கூ ற முடியுமா என்று காங்கிரஸ் கட்சி கேட்டதை ஞானி ஏன் சவுகர்யமாக மறந்து விட்டார்..

 1996 இலும் 1998 இலும் பிரதமர் வேட்பாளர் யார் என்று பெயரை அறிவித்தாலேயே காங்கிரசுக்கு பதில் தரமுடியும் என்ற நிலையில், வாஜ்பாய் அவர்களை பாஜக பிரதமர் வேட்பாளராக அறிவித்தது..அப்போது நேரு குடும்பத்திலிருந்து பிரதமர் பதவிக்கு சோனியாவோ ராகுலோ முன்வராத காரணத்தால் காங்கிரஸ் பின்வாங்கியது ஞானிக்கு நினைவில்லையா?( இரண்டு குடும்ப உறுப்பினர்கள் பயங்கர வாதிகளுக்கு இரையான பயத்தால் )

2004 ஆம் ஆண்டு கூட மாப்பிளை தோழனாக வந்தவர் மாப்பிள்ளை ஆன கதையும், 2009 இல் அவரே மாப்பிள்ளையாக வேறு வழி இன்றி தொடர்த்தும் அப்போது பாஜக சார்பில் அத்வானி அவர்கள் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் நாடு அறிந்த கதை ..நிலைமை இப்படி இருக்க இப்போது புதிதாக பிரதமர் வேட்பாளர் என்று உண்டா என்று ஞானி ஏன் கேள்வி கேட்கிறார் என்பதற்கும் காரணம் இல்லாமல் இல்லை..

பாஜக சார்பில் மோடி அறிவிக்கப்பட்டு விட்டார்…காங்கிரஸ் சார்பில் ராகுலை மட்டுமே அறிவிக்க முடியும் அதுதான் காங்கிரசின் கலாச்சாரம்..நேரு குடும்பத்தை விட்டு பிரதமர் பதவி யாருக்கும் கிடையாது.. ஆனால் ராகுலால் மோடியோடு போட்டியிடும் நிலை இன்று இல்லை ஆகவே இப்போது பிரதமர் பதவிக்கு முன் கூட்டியே வேட்பாளரை அறிவிப்பது நியாயமா என ஞானி போன்றவர்களை விட்டு காங்கிரஸ் குடும்பம் எழுதவைத்துள்ளது..

எப்படி தூற்றினாலும், எவ்வளவு அநியாயமாக எழுதினாலும், பிரச்சாரம் செய்தாலும், மோடியின் எழுச்சியை வருகையை யாராலும் தடுக்க முடியாது..இது காலத்தில் கட்டாயம்..

இந்தியா வளர –மீண்டும் எழ —மோடியே வா ..என்பதே கோடிக்கணக்கான இந்திய இளைனர்களின் கோஷம்–நம்பிக்கை –எதிர்பார்ப்பு—இதை யாராலும் தடுக்க முடியாது..

எஸ்.ஆர்.சேகர்
மாநில பொருளாளர் பாஜக 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நீதித்துறையின் பணியை, எதிர்க்க ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன 'நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன' என மக்களவை ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவ ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவில்லை எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இருஅவைகளும் நேற்று ஒத்திவைக்கப் பட்டன. ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல் நாடகத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு – அண்ணாமலை அரசியலில் தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதார ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதாரத்துடன் இணைக்க மோடி அழைப்பு கூட்டுறவு இயக்கத்தை, சுழற்சி பொருளாதாரத்துடன் இணைப்பதன் அவசியத்தை பிரதமர் ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று மோடி உரை இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று (நவ. 26), ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வ ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வழிகாட்டிய ஆர்.எஸ்.எஸ் சனிக்கிழமை (23-11-2024) அன்று வெளியான மகாராஷ்டிர சட்டப் பேரவைத் ...

மருத்துவ செய்திகள்

உடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்

சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ...

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...