வெளிமாநிலங்களில் பிரசாரம்செய்ய செல்லும்போது குஜராத் முதல்வரும் பா.ஜ.க.,வின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திரமோடிக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவேண்டும் என மத்திய அரசிடம் அம்மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை குஜராத் அரசு அனுப்பிவைத்துள்ளது. இது குறித்து கருத்துதெரிவித்த குஜராத் மாநில கூடுதல் தலைமைசெயலர் எஸ்.கே. நந்தா, வெளிமாநிலங்களில் மோடியின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என கடிதம் அனுப்பியிருக்கிறோம்.
தற்போது குஜராத்தில் அவருக்கு அளிக்கப்பட்டுவரும் பாதுகாப்பு வெளிமாநில பிரசாரத்துக்கு செல்லும்போது போதுமானதாக இருக்காது. அதனால் கூடுதல்பாதுகாப்பு கேட்டிருக்கிறோம் என்றார்.
தற்போது நரேந்திரமோடிக்கு இசட்பிளஸ் பிளஸ் பாதுகாப்பு என்எஸ்ஜி. கமாண்டோ படையினரால் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஜூன் மாதம் லோக்சபா தேர்தலுக்கான பாஜக பிரசாரக்குழுத் தலைவராக நியமிக்கப்பட்டது முதல் அவரது வீட்டுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும். |
கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.