16 மாத சிறை வாழ்க்கையிலிருந்து ஜாமினில் விடுதலையாகியுள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, விடுதலையானதன் பின்னர் கலந்து கொண்ட தனது முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பில் பா.ஜ.க.,வின் பிரதமர்வேட்பாளர் நரேந்திர மோடியை புகழ்ந்து பேசியுள்ளார்.
சிறந்த ஒரு நிர்வாகியான மோடியை பிரதமர்வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை நான் வரவேற்கிறேன். மோடி மதச்சார்பற்ற தளத்திற்கு வரவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். மதம் அரசியலாக்கப்பட வேண்டியதில்லை. ‘மோடியின் நிர்வாகத்திறமை தொடர்பில் நான் பெரும்மதிப்பு கொண்டுள்ளேன். ஏன் அவர் ஒரு மதச்சார்பற்ற, அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய ஒருபலமான எதிர் சக்தியை உருவாக்க முடியாது’ என ஜெகன் மோகன் ரெட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் காங்கிரஸ் வாக்குகளுக்காக அரசியல்விளையாட்டை விளையாடுகிறது. மாநிலங்களை பிரிக்கிறது. தண்ணீர்ப்பகிர்வு, வேலை வாய்ப்பு, ஹைதரபாத் விவகாரம் என்பனவுக்கு என்ன தீர்வு தரப்போகிறது? காங்கிரஸுடன் நான் இரகசியக்கூட்டு வைத்திருக்கிறேன் என்கிறார்கள். காங்கிரஸுடன் பேரம்பேசி நான் விடுதலையாவதற்கு பதில் சிறையிலேயே இருந்திருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ... |
மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ... |
இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.