மத்தியில் செயல்படாமலேயே ஒருஅரசு ஏன் இருக்கவேண்டும்? இன்னும் 9 மாதங்களில் மத்தியில் மாற்றம்வரும் என்று குஜராத் முதல்வரும் பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திரமோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
மும்பையில் வைர வியாபாரிகளிடையே மோடி உரையாற்றினார். கூட்டத்தின் தொடக்கத்தில் மோடிக்கு எடைக்குஎடை வெள்ளி வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மோடி பேசியதாவது: உங்களது உற்சாகமும் இங்கே பெருமளவு திரண்டிருப்பதையும் பார்க்கும் போது இந்நாடு ஒளிரும் என்பதில் நம்பிக்கை எழுகிறது. எனக்குவழங்கப்பட்ட எடைக்கு எடை வெள்ளி சர்தார்படேல் சிலைக்கானது. எனக்கானது அல்ல.
இந்தநாட்டை ஒன்றிணைத்தவர் சர்தார்பட்டேல். ஆனால் 60 ஆண்டுகாலமாக ஒருகுடும்பம் அவரை மக்களிடத்தில் மறக்கடிக்க முயற்சிக்கிறது. கடந்த 9ஆண்டுகால ஐக்கிய முற்போக்குக் கூட்டணிஅரசு எந்த ஒரு உருப்படியான செயல் பாட்டையும் மேற்கொள்ளவில்லை. செயல்படாமலேயே டெல்லியில் ஒருஅரசு ஏன் இருக்கவேண்டும்?
நாட்டின் ரூபாய்மதிப்பு கவலைக்கிடமாக இருக்கிறது. கடந்த 3 மாத காலமாக ரூபாய் மதிப்பு மீட்சி அடைந்து விடும் என்று சொல்லிக்கொண்டே இருக்கின்றனர். ஆனால் அப்படி நடந்ததாக தெரியவில்லை. மத்தியில் இருக்கும் அரசு விசாரணை அமைப்புகளை வைத்து பழிவாங்க பார்க்கிறது. என்னை யார்வரவேற்றாலும் எனக்கு யார் மாலை அணிவித்தாலும் உடனே ஐடிரெய்டு, சிபிஐ விசாரணை நடத்தப்படுகிறது.
ஒருதேசத்தில் இப்படி ஒரு பழிவாங்கும் எண்ணத்துடன் தான் ஆட்சி நடத்துவதா? 2009-ல் ஆட்சிக்கு வரும் போது 100 நாளில் விலைவாசியை குறைப்போம் என்றார்கள் . ஆனால் அளித்த வாக்குறுதியை காங்கிரஸ் அரசு நிறைவேற்றவில்லையே. நாட்டின் தற்போதைய அரசியல்போக்கு மாறிவிட்டது.
ஆனால் சில தலைவர்கள் இன்னும் 70,80,90களில் வாழ்கின்றனர். நாட்டின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு வளர்ச்சிமட்டுமே (அப்போது கூட்டத்தினர் மோடிதான் என்று முழக்கமிட்டனர்) பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்ஷெரீப்புடன் மன்மோகன் சிங் பேச்சுவார்த்தை நடத்துகிறார். ஆனா உலக டிக்ஸ்னரியில் தேடிக்கண்டுபிடித்து கடினமான வார்த்தைகளைப் போட்டிருக்கின்றனர். அவ்வளவு நம்பிக்கைஇல்லாமல் இருக்கின்றனர்.
மத்தியில் அரசு மாற்றத்துக்கான தருணம் இது.. என்மீது எத்தனை அவதூறுகள் பரப்பப்பட்டாலும் மக்கள் என்னை விட்டு விலகவில்லை. மத்தியில் ஒருஅரசு செயல்படாமலேயே ஏன் இருக்கிறது? வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் அணு ஆயுத சோதனை நடத்தப்பட்டது..உலகமே திரும்பிப்பார்த்தது. வாஜ்பாய் ஆட்சிகாலத்தில் இந்தியாவின் குரலை உலகம்கேட்டது. நமது நாட்டின் தொழிலதிபர்களுக்கு வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில்தான் மரியாதை இருந்தது வைரத்தைப்போல நாட்டை ஒளிரசெய்ய வேண்டிய தேவை இருக்கிறது. நீங்கள் முடிவுசெய்துவிட்டால் இந்த நாடு ஒளிர்வதை தடுக்க முடியாது என்றார் அவர்.
ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ... |
*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ... |
Leave a Reply
You must be logged in to post a comment.